நின்ஜா 300 ஏபிஎஸ் பைக்குகளை திரும்பி பெறும் கவாஸகி...காரணம் என்ன?

முன்பக்க பிரேக் சிலிண்டரிலுள்ள லிப் சீல் உறுதியாக இல்லை எனவும் கவாஸகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

View Photos
1,358 எண்ணிக்கை நின்ஜா 300 ஏபிஎஸ் பைக்குகளில் பிரச்சனையுள்ளது

Highlights

  • மாஸ்டர் சிலிண்டர் மற்றும் முன்பக்க பிரேக்கில் பிரச்சனை உள்ளது
  • 1,358 எண்ணிக்கை நின்ஜா 300 ஏபிஎஸ் பைக்குகள் திரும்பி பெறப்படுகிறது
  • ஆறு ஸ்பிட் கியர் வசதி கொண்டது இந்த பைக்

இந்தியாவில் 1,358 எண்ணிக்கை நின்ஜா 300 ஏபிஎஸ் பைக்குகளை திரும்பி பெறுவதாக இந்தியா கவாஸகி மோட்டர் அறிவித்துள்ளது. இந்த பைக்குகளுக்கு மாஸ்டர் சிலிண்டர் மற்றும் முன்பக்க பிரேக்கில் பிரச்சனை இருப்பதால் திரும்பி பெறப்படுகிறது.

இந்த பைக்கின் மாஸ்டர் சிலிண்டரை எண்டுரன்ஸ் என்னும் நிறுவனம் தயாரித்தது. ஆகஸ்ட் 2018 முதல் மார்ச் 2019 வரை தயாரிக்கப்பட்ட பைக்குகளில் தான் இந்த பிரச்சனை இருக்கிறது. முன்பக்க பிரேக் சிலிண்டரிலுள்ள லிப் சீல் உறுதியாக இல்லை எனவும் கவாஸகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

umhfop3

இந்த பைக்கானது 2.98 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்த பிரச்சனையை சரி செய்ய வாகன உரிமையாளர்களிடம் ஏற்கனவே அறிவிக்க துவங்கியுள்ளனர் காவாஸகி டீலர்ஷிப்கள். முன்பக்க பிரேக் மற்றும் மாஸ்டர் சிலிண்டர் இலவசமாக மாற்றி தரப்படும்.

0 Comments

296 சிசி நான்கு ஸ்டோக் 8 வால்வ் DOHC, ட்வின் இன்ஜின் பெற்றுள்ள இந்த பைக், 11000 rpm யில் 38 bhp பவரையும் 10000 rpm யில் 27 Nm உட்ச டார்க்கையும் வெளியிடுகிறது. ஆறு ஸ்பிட் கியர் வசதி கொண்ட இந்த பைக்கானது 2.98 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.