ஒடிசாவில் கடந்த 4 ஆண்டுகளில் சாலை விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை- அதிர்ச்சி அளிக்கும் தகவல்

language dropdown

போக்குவரத்து அமைச்சர் 15 ஆண்டுகள் பழமையான 22,09,573 வாகனங்கள் மாநிலத்தில் உள்ளன என்றார்

expand View Photos
சாலை விபத்துகளை தடுக்க பல முயற்சிகள் எடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்

ஒடிசாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் 18,683 பேர் சாலை விபத்துக்களில் இறந்ததாக போக்குவரத்து அமைச்சர் பத்மநாப பெஹெரா வியாழக்கிழமை தெரிவித்தார். ஒரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 2016 ல் 10,532 விபத்துக்களில் 4,463 பேர் இறந்ததாகவும் 2017 யில் 10,855 விபத்துக்களில் 4,790 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2018 ஆம் ஆண்டில் 11,262 விபத்துக்களில் மொத்தம் 5,315 பேர் இறந்ததாகவும் இந்த ஆண்டு செப்டம்பர் வரை 8,203 விபத்துக்களில் 4,115 பேர் இறந்ததாகவும் அமைச்சர் பெஹெரா கூறினார்.

மாநிலத்தில் சாலை விபத்துகளைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி மோட்டார் வாகன விதிகளை மீறியதற்காக ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை தண்டிக்க அரசாங்கம் 37 இன்டர்செப்டர்களை வேக கண்டறிதல் ரேடார் மற்றும் மூச்சு பகுப்பாய்வாளர்களை நிறுத்தியுள்ளது.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் 15 ஆண்டுகள் பழமையான 22,09,573 வாகனங்கள் மாநிலத்தில் உள்ளன என்றார். தவிர தகவல்களின்படி 11,43,026 வாகனங்கள் சாலைகளில் ஓடுகின்றன என்றும் அவர் கூறினார். மத்திய அரசால் செயல்படுத்தப்பட்ட 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை ஸ்கார்ப் செய்வதற்கான கொள்கை நடைமுறை செய்தால் பல வாகனங்கள் ஒடிசாவில் சாலைகளில் இருந்து வெளியேறும். இது மோட்டார் வாகன வருவாயை பெரிதும் பாதிக்கும் என்று அமைச்சர் கூறினார்.

0 Comments

மாநிலத்தில் மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டம், 2019 அமல்படுத்தப்பட்ட பின்னர், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஒடிசா அரசு ரூ.13.85 கோடியை அபராதமாக வசூலித்துள்ளது என்று அமைச்சர் கூறினார். இது கடந்த ஆண்டில் இதே மாதத்தில் ரூ .20.06 கோடியாக இருந்தது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News