44,775 ரூபாய்க்கு அறிமுகமான புதிய 2018 ஹோண்டா நவி

ஹோண்டா மோட்டர் சைக்கிள் நிறுவனம் 2018ம் ஆண்டிற்கான தனது புதிய நவி மோட்டார் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது

View Photos

ஹோண்டா மோட்டர் சைக்கிள் நிறுவனம் 2018ம் ஆண்டிற்கான தனது புதிய நவி மோட்டார் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் டெல்லி விலை 44,775 ரூபாய்.

2016ம் ஆண்டு நவி மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்டாண்டர்டு மாடலை விட ப்ரீமியம் மாடல் 1991 ரூபாய் விலை அதிகம். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஹோண்டா மோட்டார் சைக்கிள் என்கிற பெயரை நவி பெற்றுள்ளது.  தற்போது லத்தீன் அமெரிக்கவிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

இந்த புதிய நவியில், புதிய ஹெட்லைட் கவர், ரியர் வ்யூ மிரர் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், பச்சை மற்றும் ப்ரவுன் நிறங்களில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

0 Comments

இதன் அறிமுக விழாவில் ஹோண்டா இந்தியாவின் துணைத் தலைவர் யத்விந்தர் சிங் குலேரியா பேசுகையில், இந்திய பைக் சந்தையில் நவி தனி இடத்தைப் பெற்றுள்ளது. இதன் இன்ஜின் 109சிசி திறனோடு 8 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் டயர்கள் ட்யூப்லெஸ் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.