களம் இறங்கும் புதிய ஜீப் வகைகள்! தயாராகும் இந்திய சந்தைகள்!

மூன்று மற்றும் ஐந்து கதவு ரேங்க்லர் வகை ஜீப் மாடல்கள் இந்தியாவுக்காக இறக்குமதி செய்யப்பட உள்ளன

View Photos
Both the 3-door and 5-door Jeep Wrangler SUVs are right-hand drive (RHD) models

Highlights

  • எஸ்.யூ.வி வகை புதிய ஜீப் மாடல் இந்தியாவில் அறிமுகம்
  • மூன்று மற்றும் ஐந்து கதவு ரேங்க்லர் வகை ஜீப் மாடல்கள்
  • இந்தாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு துவக்கத்தில் சந்தைக்கு வருகிறது

2018-ம் ஆண்டுக்கான புதிய ஜீப் வகை மாடல்கள் எஸ்.யூ.வி வகைகளில் புதிதாக இந்தியாவில் களம் இறங்கியுள்ளது. மூன்று மற்றும் ஐந்து கதவு ரேங்க்லர் வகை ஜீப் மாடல்கள் இந்தியாவுக்காக இறக்குமதி செய்யப்பட உள்ளன.

இதுவரையில் இந்திய சந்தையில் ரேங்க்லர் அன்லிமிடெட் வகை மாடல்களே இருந்து வந்தன. இந்நிலையில் இறக்குமதி ஆகியுள்ள மூன்று கதவு அமைப்பு கொண்ட ரேங்க்லர் விரைவில் இந்திய சந்தையை கலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிப் வகைகளின் முற்றிலும் மாறுபட்ட இந்த எஸ்.யூ.வி வகை ரேங்க்லர் இந்திய சந்தைகளில் இந்த 2018-ம் ஆண்டு இறுதியில் அல்லது 2019-ம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 jeep wrangler spied in india

2018 மாடல் ஜீப் ரேங்க்லர் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதன்முறையாக கண்காட்சியாக 2017 லாஸ் ஏஞ்சல்ஸ் கார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அடுத்ததாக இந்த ஆண்டில் மார்ச் மாதம் ஐரோப்பியாவில் தனது அறிமுக விழாவை ஜீப் ரேங்க்லர் ஜினிவா மோட்டார் கண்காட்சி மூலம் கோலாகலமாகக் கொண்டாடியது. சமீபத்தில் இந்திய ஜீப் ரேங்க்லர் புகைப்படம் ஒன்று எதேச்சையாகக் கசிந்து வெளியானது. அதில்தான் சில்வர் நிற மூன்று கதவு வகை ஜீப் ரேங்க்லர் ஒன்றும் கறுப்பு நிற ஐந்து கதவு மாடல் அமைப்பு கொண்ட ஜீப் ரேங்க்லர் மற்றொன்று புகைப்படம் வெளியாகி உள்ளது.

 
2018 jeep wrangler spied in india

புது வகையான க்ரில் அமைப்பு, அதிக பவர் கொண்ட எல்.இ.டி விளக்குகள் என மிகப்பெரிய ப்ளாட்ஃபார்ம் உடன் அமைந்துள்ளது இந்தப் புது வகை ஜீப் ரேங்க்லர். பம்பர் மற்றும் முகப்பு விளக்குகள் என அனைத்தும் மாறுபட்டவையாக உள்ளன. மிகவும் ஸ்டைலான அலாய் சக்கரங்கள்தான் இரண்டு வகை மாடல்களுக்கும் பொருத்தப்பட்டுள்ளன. ஆப்பிள் கார் ப்ளே, நேவிகேஷன் என்னும் பயண வழிகாட்டி, ஆண்ட்ராய்டு உள் அமைப்பு, தானாக பருவ சூழலைக் கண்டறியும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் சிஸ்டம் என 2018-க்கான ட்ரெண்ட் உடன் களம் இறங்கக் காத்திருக்கிறது இந்த ஜிப் ரேங்க்லர்.

0 Comments

Image Courtesy: MotorBash

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.