பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய பைக்காக பி.எம்.டபிள்யூ எஸ்1000 ஆர்ஆர் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதனை தனது சமூகவலைதளத்தில் பி.எம்.டபிள்யூ தெரிவித்துள்ளது. பழைய பி.எம்.டபிள்யூ பைக்குகளை ஒப்பிடும் போது, இந்த புதிய பைக்கில் பல டிசைன் மாற்றங்கள் உள்ளன.
Answer the call of the road. Get your riding gear ready for a thrill unlike any you've experienced before. The all-new BMW Motorrad #S1000RR is on its way to India. Stay tuned. #MakeLifeARide #BMWMotorradIndia pic.twitter.com/6IIgWMIstF
— BMWMotorrad_IN (@BMWMotorrad_IN) February 10, 2019

இதன் ஹெட்லாப் புது பொலிவுடன் உள்ளது
மெக்கானிக்காலாக, புத்தம் புதிய பைக், 998 சிசி இன் – லைன் நான்கு மோட்டர் பெற்றுள்ளது. இது, 204 bhp மற்றும் 83 Nm உச்ச டார்க்கை பெறுகிறது. இந்த பைக்கின் எடை 197 கிலோவாகும். இது பழைய பைக்கை விட 10.6 கிலோ எடை குறைவு.

டெக்னிக்கலாக இந்த பைக் அனைத்திற்கும் முன்னோடியாக உள்ளது
இந்த பைக்கில் கார்னர் ஏபிஎஸ், டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல் இருக்கிறது. புதியதாக லான்ச் கண்ட்ரோல், பிட் லேன் ஸ்பீட் கண்ட்ரோலர் இந்த பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெக்னிக்கலாக அனைத்து பைக்கிற்கும் இது முன்னோடியாக அமைந்துள்ளது.
வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.
