எஸ்.யு.வி பிரிவில் ஃபோர்ட் நிறுவனத்தின் சிறந்த கார்..!

இந்த காரின் விலை மாடலுக்கு ஏற்ப 28.19 லட்சம் ரூபாயில் இருந்து 32.97 லட்சம் ரூபாய் வரை நிர்ணைக்கப்பட்டுள்ளது.

View Photos
எஸ்.யு.வி பிரிவில் ஃபோர்ட் எண்டிவர் அறிமுகம் செய்யப்படுகிறது

Highlights

  • ஐந்து வண்ணங்களில் இந்த கார் வருகிறது
  • இரண்டு டீசல் இன்ஜின் இந்த காரில் அறிமுகம் செய்யப்படுகிறது
  • டைட்டானியம் மற்றும் டைட்டானியம்+ என இரு வகையில் இந்த கார் கிடைக்கிறது

2016 ஆம் ஆண்டு, புது ஜெனரேஷன் எண்டிவர் காரை அறிமுகம் செய்தது ஃபோர்ட். இப்போது, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சில மாற்றங்களுடன் எண்டிவர் கார் மீண்டும் அறிமுக செய்யப்பட்டுள்ளது.

சமீப காலமாக எஸ்.யூ.வி பிரிவில் பல கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. மஹிந்திரா, டொயோட்டா, ஸ்கோடா என பல நிறுவனங்கள் தங்களது கார்களை எஸ்.யூ.வி பிரிவில் அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிலையில், ஃபோர்ட் நிறுவனமும் எண்டிவர் காரில் சில மாற்றங்கள் செய்து எஸ்.யூ.வி பிரிவில் அறிமுகம் செய்துள்ளது.

9qt88npg

ஐந்து வண்ணங்களில் எண்டிவர் கார் கிடைக்கிறது

க்ரோம் பிளேட் க்ரில், 18 இன்ச் அலாய் சக்கரம், படில் லாம்ப், மாற்றம் செய்யப்பட்ட முன் மற்றும் பின் பம்பர் என டெக்னிக்கல் மாற்றங்கள் இதில் ஏராளம்.

ஃபோர்ட் இந்தியாவின் தலைவர் அனுராக் மெக்ரோட்ரா கூறுகையில், ‘இந்திய மக்களால் அதிகம் விரும்பப்பட்ட எஸ்.யூ.வி ஃபோர்ட் எண்டிவர் ஆகும். தற்போது புது மாற்றங்கள் செய்யபட்ட எண்டிவரும் மக்களை கவரும் என எண்ணுகிறேன்' எனக் கூறினார்.

9bc9uthc

2.2 லிட்டர் டீசல் மற்றும் 3.2 லிட்டர் டீசல் வசதி இதில் உள்ளது

ஃபோர்ட் எண்டிவர் இரண்டு டீசல் வகையில் கிடைக்கின்றன. 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் டீசல் இன்ஜின் வகையில் இது வருகிறது. 2.2 லிட்டர் மாடலுக்கு மானுவல் வசதி கொண்ட 6 கியர் வசதி வருகிறது.

டைட்டானியம் மற்றும் டைட்டானியம்+ என இரு வகையில் ஃபோர்ட் எண்டிவர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டைட்டானியம் வகையில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் மட்டும் வருகிறது. டைட்டானியம்+ காரில் 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் டீசல் இன்ஜின்கள் வருகின்றன.

crvtonl8

டைட்டானியம் மற்றும் டைட்டானியம்+ வகையில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன

முன்னர் நான்கு வண்ணங்களில் கிடைத்த எண்டிவர் கார், இப்போது ஐந்து வண்ணங்களில் கிடைக்கின்றன. ஆறு ஏர் பேக் வசதியுடன் டைட்டானியம் மாடல் எண்டிவர் கார் வருகிறது. டைட்டானியம்+ காரில் ஏழு ஏர் பேக் வசதி இருக்கும்.

0 Comments

எஸ்.யூ.வி பிரிவில் ஹாண்ட்ஸ் ஃப்ரி பவர் லிஃப்ட் கேட் (Hands free Power Lift Gate) வசதி பெற்ற ஒரே கார் இதுதான். செமி-ஆட்டோ பார்லல் பார்க்கிங் வசதியும் இதில் உள்ளது. இந்த காரின் விலை மாடலுக்கு ஏற்ப 28.19 லட்சம் ரூபாயில் இருந்து 32.97 லட்சம் ரூபாய் வரை நிர்ணைக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.