சர்வதேச சந்தையில் ஹோண்டாவின் அடுத்த பைக்கான CBR400R அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் அமைப்பானது ஹோண்டாவின் மற்றோரு பைக்கான CBR500R போல் இருக்கிறது.
மெக்கானிக்கலாக ஏர் கூல்ட் 399 சிசி இரட்டை இன்ஜின் பெற்றுள்ளது இந்த CBR400R. இது 9000 rpm யில் 46 bhp மற்றும் 7500 rpm யில் 38 bhp உயர்பட்ச டார்கை வெளியிடுகிறது.
இந்த பைக்கின் டெங்க் 17 லிட்டர் கொள்ளவு பெற்றுள்ளது. இதன் எடை 192 கிலோவாகும். ஒரு லிட்டருக்கு 41 கிலோமீட்டர் வரை இந்த பைக் ஓடும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெக்னிக்கலாக LED லைட்டிங், ABS வசதி, 17 இன்ச் அலாய் சக்கரம் பெற்றுள்ளது. இந்த பைக் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. ஜப்பானில் இந்த பைக்கின் விலை 7,93,800 யென் ஆகும். இந்தியா மதிப்பில் இது 5.16 இலட்சமாகும்.
வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.