வந்து விட்டது புது யமஹா பைக்: விலை என்ன தெரியுமா?

புது YZF-R15 V3.0 ABS பைக்குகான முன்பதிவு ஏற்கனவே துவங்கியுள்ளது.

View Photos
மூன்று கலர்களில் வருகிறது இந்த புது பைக்

Highlights

  • The 2019 Yamaha R15 comes with dual-channel ABS
  • The 155 cc VVA engine produces 19 bhp and 14.7 Nm of peak torque
  • Yamaha India has another launch planned for January 21, 2019

2019  ஆண்டின் தங்களது நிறுவனத்தின் முதல் பைக்காக YZF-R15 V3.0 ABS  யமஹாவை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலையை 1.39 லட்சமாக நிர்ணயம் செய்துள்ளது யமஹா. ABS இல்லாத இதே R-15 V3.0 பைக்கை விட இந்த பைக்கின் விலை சுமார் 12 ஆயிரம் கூடுதலாக உள்ளது.

ut47v37o

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது யமஹா V3.0

2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்ட 3.0 R-15, யமஹாவின் சிறந்த பைக்குகளில் ஒன்றாக உள்ளது. அந்த பைக்குக்கும் புதியதாக அறிமுகம் செய்யபட்டுள்ள 3.0 R-15 க்கும்  ABS மாற்றம் மட்டுமே உள்ளது.

புதிய பாதுகாப்பு சட்டங்களுக்கு ஏற்ப, ஏனைய யமஹாவின் பைக்குகளும் ABSக்கு மாற்றம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து யமஹா இந்தியாவின் தலைவர் மோட்டோ ஃபூமி கூறுகையில், ‘பைக் மார்கெட்டில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்ததே R-15 தான். இப்போது அதில் இரு ABS கொண்டுவந்துள்ளோம். 150 சிசி+ பைக்குகளில் இரு ABS உடன் வரும் முதல் பைக் இது தான். இதன் மூலம் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்' என்றார்.

7j8v8184

அனைத்து யமஹா பைக்குகளில் ABS வசதி வரவுள்ளது. 

0 Comments

புது YZF-R15 V3.0 ABS பைக்குகான முன்பதிவு ஏற்கனவே துவங்கியுள்ளது. இந்நிலையில், யமஹாவின் அடுத்த பைக்காக FZ V3.0 வர இருக்கிறது. அதிலும் இரண்டு ABS வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.