150 சிசி பஜாஜ் பல்சர் 2020 மாடல் சந்தைக்கு வந்தது!! விலை ரூ. 94,956 மட்டுமே!

language dropdown

பி.எஸ். 4 மாடலை விட விலை ரூ. 9 ஆயிரம் வரையில் கூடுதலாக பி.எஸ். 6-ன் விலை இருக்கும். 150 நியான் வண்ண பல்சருக்கான விலையை பஜாஜ் இன்னும் வெளியிடவில்லை.

expand View Photos
பஜாஜ் பல்சர் 150 சிசி 2020 மாடல் 2020 மாடலில் 2 வகையான பைக்குகளுக்கு விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் நிறுவனத்தின் வெற்றிகரமான பைக்கான பல்சர் 150 சிசியின் 2020 மாடல் சந்தைக்கு வந்துள்ளது. இந்த பைக் எரிபொருள் மூலம் கார்பன் வெளியேற்றும் விதிமுறையான பி.எஸ்.6-க்கான விதிகளை பூர்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஸ்டாண்டர்டான 2 டிஸ்க் ப்ரேக், சற்று மாறுபட்ட ஃப்யூல் இன்ஜெக்சன் அமைப்பு உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்கள். இதில் ஃப்யூல்இன்ஜெக்சன் அமைப்பு பஜாஜின் ஆர் அண்டு டி மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு விரைவான பிக் அப், சொகுசான ஸ்டார்ட் மற்றும் எரிபொருள் மிச்சத்தை உறுதி செய்யும் என்று பஜாஜ் தெரிவித்துள்ளது. 

20gvk388

பி.எஸ். 4 மாடலை விடவும், புதிதாக வந்துள்ள பல்சர் பி.எஸ். 6- மாடலின் விலை ரூ. 8,998 அதிகமாகும்.

கருப்பு க்ரோம் மற்றும் கருப்பு சிவப்பு என்ற 2 வண்ணங்களில் பஜாஜ் பல்சர் பி.எஸ். 6 மாடல் சந்தைக்கு வந்துள்ளது. 

டெல்லி ஷோரூம்களில் முன்பக்க டிஸ்க் பிரேக் மட்டும் கொண்ட பைக் ரூ. 94,956- க்கும், இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் கொண்ட பைக் ரூ. 98,835-க்கும் விற்பனையாகிறது. 

பி.எஸ். 4 மாடலை விடவும், புதிதாக வந்துள்ள பல்சர் பி.எஸ். 6- மாடலின் விலை ரூ. 8,998 அதிகமாகும். 150 சிசி மாடல் பைக்குகளில் பஜாஜ் பல்சர்தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்காக உள்ளது. நியான் வண்ணத்திலும் பல்சர் 150 சந்தைக்கு வந்துள்ளது. 

.

scknge64

டெல்லி ஷோரூம்களில் முன்பக்க டிஸ்க் பிரேக் மட்டும் கொண்ட பைக் ரூ. 94,956- க்கு விற்பனையாகிறது

இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ லிமிட்டெட்டின் தலைவர் சாரங்க் கனாடே கூறுகையில், 'புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பைக்குகள், நாங்கள் பி.எஸ்.6-க்கு மாறி விட்டோம் என்பதைக் காட்டுகின்றன. தொடர்ந்து பி.எஸ். 6 மாடல்கள் இன்னும் சில வாரங்களில் சந்தைக்கு கொண்டு வரப்படும். இந்த மாடல் பைக்குகள் மிகச்சிறந்த திறனை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்' என்று கூறியுள்ளார்.

புதிதாக வந்துள்ள 150 சிசி பைக் ஏற்கனவே சந்தையில் இருக்கும் பைக்கைப்போன்று 149.5 சிசி பவர், சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் 2 வால்வ், சிங்கிள் ஓவர்ஹெட் கேம் (SOHC) எஞ்சின் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஃப்யூல் இன்ஜெக்சனில் மட்டும் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பவரை பொறுத்தளவில் 13.8 பி.எச்.பி. பவர் புதிய பைக்கிலும் உள்ளது. 

மோட்டார் சுழற்சியை பொறுத்தளவில் ஆர்.பி.எம். 8,500 முதல் 8000 வரையில் இருக்கும். பீக் டார்க் 13.4 என்.எம்.-லிருந்து 13.25 என்.எம். வரைக்கும் குறையலாம். மொத்தம் 148 கிலோ எடை கொண்டதாக இந்தபைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. 150சிசி பைக்குகளில் நியான் வண்ண பைக்கின் விலை குறைவாக இருக்கும். ஆனால் தற்போது வந்துள்ள புதிய மாடலில் நியான் வண்ண பைக்கின் விவரம் குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

0 Comments

.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News