அட்டகாசமான அப்டேட்டுடன் அறிமுகமானது 2020 ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350!

பிஎஸ் 6 ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350, புல்லட் 350 இஎஃப்ஐ, மற்றும் நுழைவு நிலை புல்லட் எக்ஸ் 350 இஎஃப்ஐ ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது.

2020 RE புல்லட் 350, இரண்டு வேரியண்டுகளில், நான்கு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது expand View Photos
2020 RE புல்லட் 350, இரண்டு வேரியண்டுகளில், நான்கு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது

வாகன உலகில் கொடிகட்டி பறக்கும் ராயல் என்ஃபீல்ட், அதன் புல்லட் 350-ல் கூடுதல் அம்சங்களை சேர்த்து, புதிய மலிவு மோட்டார் சைக்கிளாக அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக், பாரத் ஸ்டேஜ் VI (பிஎஸ் 6) உமிழ்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் மாடலில் கார்பூரேட்டட் எஞ்சினுக்கு பதிலாக மின்னணு எரிபொருள் இன்ஜெக்‌ஷன் (EFI) பெற்றுள்ளது. 

Also Read: Royal Enfield Invokes Force Majeure On Case To Case Basis

6s6mh3fk
புல்லட் எக்ஸ் 350 ஒரு பிளாக் அவுட் எஞ்சின் மற்றும் சக்கரங்களையும், எரிபொருள் டேங்கில் ராயல் என்ஃபீல்ட் டிகாலையும் பெறுகிறது

பைக்கின் விலை: 

புல்லட் எக்ஸ் 350 வேரியண்டின் விலை ரூ.1,21,583 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). இந்த பைக், கருப்பு மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
புல்லட் 350-யின் விலை ரூ.1,27,750 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). இந்த பைக், ஓனிக்ஸ் பிளாக் மற்றும் புல்லட் சில்வர் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

Also Read: 2020 Royal Enfield Bullet 350 To Be Priced At ₹ 1.21 Lakh

uc8f8fmk
2020 ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 3டி ராயல் என்ஃபீல்ட் சின்னத்தையும், எரிபொருள் டேங்கில் கையால் வரையப்பட்ட 'மெட்ராஸ் ஸ்ட்ரைப்ஸையும்' வைத்திருக்கிறது. 

பைக்கின் சிறப்பம்சங்கள்:

0 Comments

இந்த பைக் பிளாக் அவுட் என்ஜின் மற்றும் பிளாக் அவுட் சக்கரங்களைக் கொண்டுள்ளது. 
2020 ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350, 3டி ராயல் என்ஃபீல்ட் சின்னத்தையும், எரிபொருள் டேங்கில் கையால் வரையப்பட்ட 'மெட்ராஸ் ஸ்ட்ரைப்ஸையும்' வைத்திருக்கிறது.
பிஎஸ் 6 ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 அதே 346 சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சினைக் கொண்டுள்ளது. 
இந்த எஞ்சின் 5,250 ஆர்பிஎம்மில் 19.1 பிஹெச்பி அதிகபட்ச சக்தியையும், 4,000 ஆர்பிஎம்மில் 28 என்எம் பீக் டார்க்கையும் வெளியேற்றுகிறது. 
சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடன் 280 மிமீ ஒற்றை ப்ரண்ட் டிஸ்க் மற்றும் 153 மிமீ பின்புற டிரம் பிரேக் மூலம் பிரேக்கிங் வேலை செய்கிறது. 
சிங்கிள் டவுன்ட்யூப் சேஸ் போலவே சஸ்பென்ஷன் மற்றும் சக்கரங்கள் உள்ளிட்ட பிற சுழற்சி பாகங்களும் அப்படியே இருக்கின்றன. 
2020 ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350-ன் எடை 186 கிலோவாகும். 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

Be the first one to comment
Thanks for the comments.