பஜாஜ் நிறுவனத்தின் புது பல்சர் 125 சிசி பைக் அறிமுகம்...!

பல்சர் 150 சிசி யின் விலை ஏறுவதால் அதனை பொருத்து 125 சிசி பைக்கை அறிமுகம் செய்துள்ளது பஜாஜ்.  

View Photos

Highlights

  • 125 சிசி, DTS-i இன்ஜின் பெற்றுள்ளது இந்த பைக்
  • மூன்று வண்ணங்களில் இந்த பஜாஜ் நியான் 125 பைக் கிடைக்கிறது.
  • இரண்டு மாடல்களில் இந்த பஜாஜ் பல்சர் 125 நியான் பைக் கிடைக்கும்.

பஜாஜ் நிறுவனத்தின் சிறந்த பைக்காக கருதப்படுவது பல்சர் ஆகும். 150, 180, 220 என பல சிசி களில் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது பஜாஜ் பல்சர் 125 நியான் பைக்கை அறிமுகம் செய்துள்ளது பஜாஜ் ஆட்டோ லிமிடெட். இரண்டு மாடல்களில் இந்த பஜாஜ் பல்சர் 125 நியான் பைக் கிடைக்கும்.

ட்ரம் பிரேக் மாடல் பைக்கின் விலை 64,000 ரூபாயாகவும் முன்பக்க டிஸ்க் வகை பைக்கின் விலை 66,618 ரூபாயாகவும் நிர்ணைக்கப்பட்டுள்ளது. Neon Blue, Solar Red, Platinum Silver என மூன்று வண்ணங்களில் இந்த பஜாஜ் நியான் 125 பைக் கிடைக்கிறது.

பைக்

k05btdb

இந்த புது பல்சர் பைக்கின் விலை 64,000 ரூபாயாக நிர்ணைக்கப்பட்டுள்ளது

இதனை குறித்து பஜாஜ் ஆட்டோவின் தலைவர் சராங் கண்ணடே கூறுகையில், ‘125 சிசி வகையில் பல்சர் பைக்கை கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம். ஸ்போர்ட் மாடல் பைக்கை சிறந்த ஸ்டைலில் அற்புதமான விலையில் வாங்க விரும்பும் மக்களுக்கு இந்த பல்சர் 125 நியான் சிறந்த பைக்காக இருக்கும்' என்றார்.

மெக்கானிக்கலாக 125 சிசி, DTS-i இன்ஜின் பெற்றுள்ள இந்த பைக் 8500 rpm யில் 11.8 bhp பவரையும் 6500 rpm யில் 11 Nm உட்ச டார்க்கையும் தருகிறது. 140 கிலோ கேர்ப் எடை கொண்ட இந்த பைக் 5 ஸ்பிட் கியர் பாக்ஸ் பெற்றுள்ளது. கூடுதலாக எந்த கியரிலும் இந்த பைக் ஸ்டார்ட் செய்யும் படி மெக்கானிச்சம் அமைக்கப்பட்டுள்ளது.

0 Comments

125 சிசி மேல் உள்ள பைக்குகளுக்கு சிபிஎஸ், 150 சிசி மேல் உள்ள பைக்குகளுக்கு ஏபிஎஸ் ஆகியவை கட்டாயமாக்கப்படுகிறது. ஏப்ரல் 1,2020 முதல் BS 6 அமலுக்கு வரவுள்ளதால் பைக்குகளின் விலை ஏற்றம் காணவுள்ளது. இதனால் பல்சர் 150 சிசி யின் விலையும் ஏறும். எனவே அதனை பொருத்து 125 சிசி பைக்கை அறிமுகம் செய்துள்ளது பஜாஜ்.  

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Bajaj Pulsar 150 with Immediate Rivals