ஹங்கேரி தொழிற்சாலையில் ஆடி நிறுவனம் கொண்டு வரும் மாற்றம்

language dropdown

2018 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 1.95 மில்லியன் இன்ஜின்களில் 9,453 எலக்ட்ரிக் ஆக்சில் டிரைவ் யூனிட்டுகள் என்று நிறுவனத்தின் வலைத்தளம் தெரிவித்துள்ளது

expand View Photos
ஆடியின் ஹங்கேரி தொழிற்சாலையில் இன்ஜின்கள் அதிக அளவில் தயாரிக்கப்படவுள்ளது

ஜெர்மனிய கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி தனது ஹங்கேரிய தொழிற்சாலையில் இன்ஜின் தயாரிப்பை அடுத்த ஆண்டு 2.25 மில்லியன் யூனிட்டுகளாக உயர்த்தும் என்று ஹங்கேரிய வெளியுறவு மந்திரி பீட்டர் சிஜ்ஜார்டோ திங்களன்று தெரிவித்தார்.

ஜெர்மனியில் உள்ள பிரீமியம் கார் தயாரிப்பாளரின் இங்கோல்ஸ்டாட் தலைமையகத்தில் ஒரு ஆடி பிரதிநிதி உள் திட்டமிடல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

"அடுத்த ஆண்டு 2.25 மில்லியன் இன்ஜின்களை உற்பத்தி செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர், இதுவரை 2 மில்லியன்கள் வருடாந்திர சாதனையாக உள்ளது" என்று சிஜ்ஜார்டோ ஒரு செய்தி மாநாட்டில் கூறினார். ஆடியின் ஹங்கேரிய பிரிவு ஏப்ரல் மாதத்தில் தனது தொழிற்சாலையில் இன்ஜின்கள் உற்பத்தியை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது என்று கூறியது. இது 2018 ஆம் ஆண்டில் அங்கு தயாரிக்கப்பட்ட 1.95 மில்லியனில் இருந்து கணிசமான அளவு அதிகமாக இருக்கும் என கூறியது.

மேற்கு நகரமான கியோரில் உள்ள தொழிற்சாலையில் மின்சார கார்களுக்கான இயந்திரங்களின் உற்பத்தியை விரிவுபடுத்துவதாகவும் ஜூலை மாதம் கூறியது. அதன் மின் மாற்றும் திட்டம் 250 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அது கூறியது.

வோக்ஸ்வாகன் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கார் தயாரிப்பாளர் 1994 முதல் ஹங்கேரியில் இன்ஜின்களை உருவாக்கி வருகிறது. 2018 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 1.95 மில்லியன் இன்ஜின்களில் 9,453 எலக்ட்ரிக் ஆக்சில் டிரைவ் யூனிட்டுகள் என்று நிறுவனத்தின் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

0 Comments(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.