ஆட்டோமொபைல் துறையில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் வேலையிழப்பு...!

2000 சிறு, பெறு நிறுவனங்கள் உடைய அம்பத்தூர் எஸ்டேடில் 3 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள்

View Photos
3.5 லட்சம் பேர் ஆட்டோமொபைல் துறையில் வேலை இழந்துள்ளனர்

Highlights

  • தீபாவளி காலம் வருவதால் ஆட்டோமொபைல் துறையில் பாசிடிவ் மாற்றம் ஏற்படலாம்
  • ஓர் ஆண்டாகவே ஆட்டோமொபைல் வீழ்ச்சியடைந்துள்ளது
  • அரசு ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என கேட்டுள்ளனர்

சமீபகாலமாக இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இந்த வீழ்ச்சி ஆட்டோமொபைல் நிறுவனங்களை சார்ந்து சிறு பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களையும் பாதித்துள்ளது. இதனால் 3,50,000 பேர் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

சென்னையின் அம்பத்தூர் எஸ்டேடில் வால்வ் பாகங்களை தயாரிக்கும் ஜான் பீட்டரின் நிறுவனமும் இதற்கு விதி விலகல்ல. 8 லட்சம் ரூபாய் மாத வருமானமாக பெற்று வந்த அந்த நிறுவனம், கடந்த ஐந்து மாதங்களில் 90 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது அதன் மாத வருமானம் 1 லட்சம் ரூபாயாக உள்ளது. 40 லட்சம் ரூபாய் தனியார் வங்கி லோன் வைத்துள்ள ஜான் பீட்டர், இந்த பணத்தை லோனாக அடைக்கவே சரியாகவுள்ளது. அது போக அவரது நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் எண்ணிகையை 13 யில் இருந்து 10 ஆக குறைத்துள்ளார்.

அவர் என்டிடிவி க்கு கூறும் போது, ‘இன்றைய நிலையில் என்னால் சம்பளத்தையும் லோனையும் திரும்பி அடைக்க முடியவில்லை. வங்கிகளிடம் பிசினஸ் சரியாக இல்லை என்று கூறினாலும் அவர்கள் அதனை ஏற்கும் பட்சத்தில் இல்லை' என்றார்.

அவரின் தொழிலாளரான சந்திரபோஸ் மாதம் 18000 ரூபாய் சம்பாதித்து வந்தார். ஆனால் தற்போது அது மூன்றில் ஒரு பங்காக மாறியுள்ளது. பள்ளி செல்லும் இரண்டு குழந்தைகள் உடைய சந்திரபோஸ், ‘இந்த வேலை இருந்தால் தான் என்னால் வாழ முடியும். என் குடும்பத்தை அதை வைத்து தான் பார்த்து கொள்ள முடியும்' என்றார்.

new maruti suzuki showroom design

அரசு ஜிஎஸ்டியை குறைக்க வேண்டுமென பல நிறுவனங்கள் கேட்டுள்ளனர்

30 ஆண்டுகளாக பிரேக் பாகங்கள் செய்து வரும் ஆண்ட்ரு ரஞ்சித்குமார் அந்த தொழிலை மூட முடிவு செய்துள்ளார். ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் இருந்து வரும் ஆடர்கள் 70 சதவிகிதம் குறைந்துள்ளது தான் இதற்கான முக்கிய காரணம். ‘ஆட்டோமொபைல் பிரிவு வீழ்ச்சியடைந்துள்ளதால் தற்போது வீட்டு உபயோகப் பாகங்களை செய்ய துவங்கியுள்ளோம். இல்லையேல் சிலர் வேலை இழக்க நேரிடும். என்னால் சம்பளத்தையும் வழங்க முடியவில்லை' என்றார்.

2000 சிறு, பெறு நிறுவனங்கள் உடைய அம்பத்தூர் எஸ்டேடில் 3 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். அவர்கள் அரசு இதில் தலையிட வேண்டும் என  கேட்டுள்ளனர். அம்பத்தூர் எஸ்டேட் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என் சுஜேஷ் கூறுகையில், ‘ஜிஎஸ்டி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்க வேண்டும். சிறு நிறுவனங்களுக்கு அது 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும்' என்றார்.

சேலத்தின் கார் டீலரான பழனிவேல் பாபு, தான் ஆப் டெக் (off take) 35 சதவிகிதம் குறைத்துள்ளதாக கூறினார். ‘வளர்ந்த நாடுகளில் மார்கெட் பங்கு என்பது வாடிக்கையாளர்களை வைத்தே கணக்கிடப்படுகிறது. இந்தியாவில் மட்டுமே தயாரிப்பாளர்கள் டீலர்களுக்கு விற்பதை வைத்து கணக்கிடப்படுகிறது. இது டீலர்கள் ஸ்டோக்குகளை வைத்து கொள்ள நிர்ணைக்கிறது. இது தவறான முறையாகும்' என்றார்.

தீபாவளி காலம் வருவதால் ஆட்டோமொபைல் துறையில் சில பாசிடிவ் மாற்றங்கள் ஏற்படும் என எண்ணுகிறார்கள். ஆனால் அதற்கு அரசு சில மாற்றங்கள் செய்தாக வேண்டும்.  

0 Comments

    

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.