வீழ்ச்சியில் ஆட்டோமொபைல் துறை - 19 ஆண்டுகளில் மோசமான மாதமாக ஜூலை 2019 பதிவு...!

சமீபத்திய NDTV ரிப்போர்ட்டின் படி ஆட்டோமொபைல் துறையில் 3,35,000 பேர் வேலையிழந்துள்ளனர்.

View Photos
ஓர் ஆண்டாகவே சரிவில் தான் செல்கிறது ஆட்டோமொபைல் துறை

Highlights

  • நிசான் இந்தியாவில் 1,710 பேர் வேலையிழந்துள்ளனர்
  • BS 6 கட்டுபாடுகளுக்கு நிறுவனங்கள் 80,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது
  • பாசஞ்சர் வாகனங்கள் 30.98 சதவிகிதம் வீழ்ச்சி சந்தித்துள்ளது

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை கடுமையான சரிவை பதிவு செய்து வருகிறது. ஜூலை 2019 மாதம் என்பது ஆட்டோமொபைல் துறையின் வரலாற்றில் மோசமான மாதங்களில் ஒன்றாகும். கடந்த 19 ஆண்டுகளில் ஜுலை 2019 யில் சந்தித்த சரிவை போன்றொரு சரிவை ஆட்டோமொபைல் துறை சந்தித்தது இல்லை.

ஜூலை 2018 யில் 2,90,391 பாசஞ்சர் வாகனங்கள் விற்கப்பட்டன. ஆனால் ஜூலை 2019 யில் 2,00,790 பாசஞ்சர் வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டன. இது 30.98 சதவிகிதம் வீழ்ச்சியாகும். பாசஞ்சர் கார்களை பொருத்தவரை ஜூலை 2018 யில் 1,91,979 வாகனங்களும் ஜூலை 2019 யில் 1,22,955 வாகனங்களும் விற்கப்பட்டன. இது 35.95 சதவிகிதம் வீழ்ச்சியாகும். யூவி பிரிவில் 15.22 வீழ்ச்சி பதிவானது. ஜூலை 2018 யில் 79,063 வாகனங்களும் ஜூலை 2019 யில் 67,030 வாகனங்களும் யூவி பிரிவில் விற்கப்பட்டன.

இப்படிபட்ட சரிவை கடைசியாக 2000 யில் தான் ஆட்டோமொபைல் துறை பதிவு செய்தது. டிசம்பர் 2000 யில் பாசஞ்சர் வாகனங்களில் 35 சதவிகிதம் சரிவையும் பாசஞ்சர் கார்களில் 39.86 சதவிகிதம் சரிவையும் ஆட்டோமொபைல் துறை பதிவு செய்திருந்தது.

இந்தியாவில் கார், பைக்குகளுக்கான புது கட்டுபாடுகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளன. இதனையடுத்து அனைத்து நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை புது கட்டுபாடுகளுக்கு ஏற்ப அப்டேட் செய்துவருகிறது. இந்நிலையில் ஆட்டோமொபைல் துறையில் இப்படிப்பட்ட ஓர் சரிவு என்பது கவலைக்குரியதாகும். BS 6 கட்டுபாடுகளுக்கு தங்களது வாகனங்களை மாற்ற நிறுவனங்கள் 80,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. ஆட்டோமொபைல் துறையானது இப்படி தொடர் சரிவை பதிவு செய்தால் முதலீடு செய்த தொகையை திரும்பி சம்பாதிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சவாலாக அமையும். ஆட்டோமொபைல் துறைக்கு தற்போது 28 சதவிகிதம் ஜிஎஸ்டி நிர்ணைக்க செய்யப்பட்டுள்ளது. அதனை குறைத்து 18 சதவிகிதமாக மாற்ற வேண்டும் என SIAM கேட்டுள்ளது.

0 Comments

மேலும் ஆட்டோமொபைல் துறையில் தற்போது முக்கிய பிரச்சனையாக உருவெடுத்திருப்பது வேலை நீக்கம். தங்களது சரிவை ஈடுசெய்ய பல நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுப்பட்டுள்ளன. மாருதி சூசுகியில் 6 சதவிகிதம் பேரும் நிசான் இந்தியாவில் 1,710 பேரும் வேலையிழந்துள்ளனர். ACMA யின் தலைவரான ராம் வெங்கடரமணி, தொடர்ந்து ஆட்டோமொபைல் துரை சரிவை பதிவு செய்தால் 1 மில்லியன் பேர் வேலையிழக்க நேரிடும் என தெரிவித்தார். மகிந்திரா மற்றும் மகிந்திராவின் எம்டி யான பவன் கோயங்க், ஆட்டோமொபைல் துறையில் பலர் வேலையிழக்க உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சமீபத்திய NDTV ரிப்போர்ட்டின் படி ஆட்டோமொபைல் துறையில் 3,35,000 பேர் வேலையிழந்துள்ளனர்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.