ரெனால்ட் நிறுவனத்தின் இயக்குனராக கார்லோஸ் கோசன் நீடிக்கிறார்

சேர்மன் பொறுப்பில் இருந்து சில நாட்களுக்கு முன்பாக கார்லோஸ் ராஜினாமா செய்திருந்தார்.

View Photos
சேர்மன் பொறுப்பில் இருந்து சில நாட்களுக்கு முன்பாக கார்லோஸ் ராஜினாமா செய்திருந்தார்.

பிரான்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட்டின் இயக்குனராக கார்லோஸ் கோசன் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரெனால்ட் கார் தயாரிப்பு நிறுவனம் பிரான்சை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பயணிகள் கார்கள், கார் உபகரண பொருட்கள், இலகு ரக வர்த்தக வாகனங்கள் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. 

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுடன் இணைந்து ஆட்டோ மொபைல்களை ரெனால்ட் உற்பத்தி செய்கிறது. இதன் வாகனங்கள் சுமார் 125 நாடுகளில் விற்பனையாகின்றன. இதன் சேர்மன் பொறுப்பில் கார்லோஸ் கோசன் இருந்து வந்தார். சமீபத்தில் அந்தப் பொறுப்பை அவர் ராஜினாமா செய்து விட்டார். 

இந்த நிலையில் அவர் நிர்வாக கமிட்டி போர்டின் இயக்குனராக தொடர்ந்து நீடிப்பார் என்று ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் சேர்மனாக தியரி பொல்லார் நீடிக்கிறார். 

0 Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.