பஜாஜ் நிறுவன பைக்குகளின் விலை திடீர் உயர்வு! எவ்வளவு தெரியுமா?

சமீபத்தில் டோமினார் 400 பைக்கின் விலை உயர்ந்த நிலையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது, தனது பெரும்பாலான பைக்குகளின் விலையையும் ரூ.2950 வரை உயர்த்தி அறிவித்துள்ளது.

View Photos
பஜாஜ் பல்சர் 150 பைக்கின் விலை ரூ.2950 வரை உயர்கிறது.

பஜாஜ் டோமினார் 400 பைக்கின் விலை ரூ.6000 வரை விலை உயர உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தோம். அதைத்தொடர்ந்து, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது அதன் பெரும்பாலான பைக்குகளின் விலைகளை ரூ.2950 உயர்த்தி அறிவித்துள்ளது. 

இந்த விலை உயர்வானாது, ஆரம்ப கட்ட மாடாலன பஜாஜ் பிளாட்டினா பைக்குகளுக்கும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விலை ஏற்றத்தில் இருந்து பஜாஜ் அவெஞ்சர் 220 பைக்குகள் மட்டும் தப்பியுள்ளன. 

பைக்

ஹீரோ மோட்டார் சைக்கிள் நிறுவனம் சமீபத்தில் தனது இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்தி அறிவித்த நிலையில், அதன் வரிசையில் தற்போது, பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் இணைந்துள்ளது. அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் 1 சதவீதம் வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, பஜாஜ் பல்சர் 150 நியான் பைக்குகள் அதிகபட்சமாக ரூ.2950 வரை விலை உயர்த்தப்பட்டு தற்போது, ரூ.71,200 முதல் விற்பனை செய்யப்படுகிறது. பஜாஜ் வி15 பவர் அப் பைக்குகள் ரூ.1113 வரை விலை உயர்த்தப்பட்டு தற்போது ரூ.66,739 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

பஜாஜ் பிளாட்டினா 100 ES பைக்குகள் ரூ.1024 வரை விலை உயர்த்தப்பட்டு தற்போது, ரூ.48,429 முதல் விற்பனை செய்யப்படுகிறது. (அனைத்து விலைகளும் ex-showroom டெல்லிக்கு உட்பட்டது). பிளாட்டினா 100 KS மற்றும் பிளாட்டினா 110 பைக்குகளுக்கு சிறிய அளவு விலை உயர்வாக ரூ.147 மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 

இதில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிளாட்டினா H கியர் மாடல் பைக்குகளுக்கு எந்த விலை ஏற்றமும் அறிவிக்கப்படவில்லை. இந்த விலை ஏற்றம் குறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் எந்த காரணமும் தெரிவிக்கவில்லை. அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகள் காரணமாக இந்த விலை ஏற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில், பஜாஜ் நிறுவனம் வெளியிடவுள்ள புதிய பைக்குகள் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி நீண்ட நாட்களாக வதந்திகளாக பரவி வந்த பஜாஜ் பல்சர் 125 மாடல் பைக்குகள் இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிகிறது.

0 Comments

இந்த மாடல், ஏற்கனவே நிறுத்தப்பட்ட பல்சர் 135 மாடலுக்கு மாற்றாக களமிறக்கப்பட உள்ளது. பல்சர் 150 கிளாசிக் மாடல் விற்பனையை தொடர்ந்து, இந்த பல்சர் 125 மாடல் பைக்குகளுக்கும் அமோக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Bajaj Pulsar 150 with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.