பஜாஜ் உற்பத்தில் ஆலையில் 250 பேருக்கு கொரோனா; செயல்பாட்டை நிறுத்தச் சொல்லும் ஊழியர்கள்!

ஓராண்டுக்கு அவுரங்கபாத்தில் உள்ள வாலுஜ் ஆலையில் இருந்து மட்டும் பஜாஜ் நிறுவனம், சுமார் 33 லட்சம் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறது

expand View Photos
ஆலையில் ஒரு ஊழியருக்கு தொற்று ஏற்பட்டால், அவருடன் தொடர்புடைய 4 ஊழியர்களை தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

Highlights

  • தொடர்ந்து ஆலையை இயக்குவதாக சொல்கிறது பஜாஜ் நிறுவனம்
  • இந்த முடிவுக்கு ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது
  • மகாராஷ்டிராவில்தான் இந்த ஆலை அமைந்துள்ளது

இந்தியாவன் மிகப் பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜின், மகாராஷ்டிராவில் உள்ள உற்பத்தில் ஆலையில் 250 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆலையின் செயல்பாட்டை நிறுத்துமாறு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் நாட்டில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவத் தொடங்கியபோது, இந்தியா லாக்டவுன் கட்டுப்பாடுகளை அறிவித்தது. மூன்று மாதங்களுக்குப் பின்னர் அந்தக் கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல நிறுவனங்களும் தங்களின் பற்றாக்குறையை சமாளிக்க அதிக உற்பத்தியில் இறங்கின. அப்படித்தான் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இருக்கும் பஜாஜ் உற்பத்தி ஆலையிலும் இரு சக்கர வாகன உற்பத்தி முடுக்கிவிடப்பட்டது. ஆனால் நாட்டிலேயே கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் அமைந்துள்ள இந்த ஆலையின் தொழிலாளர்களில் 250 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தொடர்ந்து செயல்படுவதில் பிரச்னை எழுந்துள்ளது. 

p1i8m064

பஜாஜின் உற்பத்தில் 50 சதவீதம் இந்த ஆலையில்தான் நடக்கிறது.

இது குறித்து, பஜாஜ் ஆட்டோ ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் தென்காடே பாஜிராவ், “பணியாளர்கள் வேலைக்கு வரவே அஞ்சுகிறார்கள். சிலர் வருகிறார்கள். ஆனால் பெரும்பான்மையானவர்கள் விடுப்பில்தான் உள்ளனர்” என்கிறார். கடந்த ஜூன் 26 ஆம் தேதி, தங்கள் அவுரங்காபாத் ஆலையில் பணி செய்து வரும் சுமார் 8,000 ஊரியர்களில் 140 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது பஜாஜ். 

மேலும், தங்கள் நிறுவன ஆலைகளில் உற்பத்திப் பணியானது முழு வீச்சில் நடக்கும் என்றும், வைரஸ் தொற்றோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னது பஜாஜ். அதேபோல தங்கள் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலும் பஜாஜ் நிறுவனம், ‘யாரெல்லாம் பணிக்கு வரவில்லையோ அவர்களுக்கு சம்பள வெட்டு இருக்கும்,' என்று எச்சரித்துள்ளது. 

இந்த விவகாரம் பற்றி விளக்கம் கேட்க, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பஜாஜ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டது. ஆனால், பதில் கிடைக்கவில்லை. 

ஊழியர்கள் சங்கம், “தற்போது தொற்று பரவும் சூழலைத் தடுக்க 10 முதல் 15 நாட்கள் ஆலையை மூடுமாறு நாங்கள் நிறுவனத்திடம் தெரிவித்தோம். ஆனால், மக்கள் எப்படியும் வெளி இடங்களில் கூடத்தான் செய்வார்கள். அதனால், பணியை நிறுத்துவதில் எந்தப் பயனும் இல்லை,” எனக் கூறிவிட்டது. 

549icv5g

பஜாஜின் அனைத்து ஷோ-ரூம்கள் திறக்கப்பட்டுள்ளன

ஆலையில் ஒரு ஊழியருக்கு தொற்று ஏற்பட்டால், அவருடன் தொடர்புடைய 4 ஊழியர்களை தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் மேலும் உற்பத்தி பாதிக்கப்படுவதாக தகவல். 

ஓராண்டுக்கு அவுரங்கபாத்தில் உள்ள வாலுஜ் ஆலையில் இருந்து மட்டும் பஜாஜ் நிறுவனம், சுமார் 33 லட்சம் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறது. இது இந்தியாவில் அது உற்பத்தி செய்யும் பைக்குகளின் விகிதத்தில் 50 சதவீதம் ஆகும். 

0 Comments

ஆலையில் பணி செய்யும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர், “வாகன அசெம்பளி லைனில், ஒரே இன்ஜினை பலர் தொட நேரிடும். நாங்கள் கையுரை அணிந்துதான் பணி செய்கிறோம். இருப்பினும் வைரஸ் தொற்று வந்துவிடுகிறது” என்கிறார் வருத்தத்துடன். 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.