பெரும் எதிர்ப்பார்ப்பைத் தூண்டும் Bajaj Chetak எலக்ட்ரிக் ஸ்கூட்டர்- முக்கியத் தகவல்கள்!

Bajaj Chetak electric scooter- இத்தாலிய ரெட்ரோ வகை ஸ்கூட்டர்களைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது Bajaj Chetak.

அதிகாரபூர்வமாக வெளியானவுடன், Bajaj Chetak-க்கான புக்கிங் தொடங்கப்படும் expand View Photos
அதிகாரபூர்வமாக வெளியானவுடன், Bajaj Chetak-க்கான புக்கிங் தொடங்கப்படும்

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ், தனது Bajaj Chetak எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சீக்கிரமே அறிமுகம் செய்ய உள்ளது. வரும் 14 ஆம் தேதி, இந்த இரு சக்கர வாகனம் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வாகனத்தின் விலை, கண்டிப்பாக தனது போட்டியாளர்களுக்கு சவால்விடும் வகையில் இருக்கும் என்று பஜாஜ் நிறுவனம் தொடர்ந்து சொல்லி வருகிறது. எப்படியும் Bajaj Chetak, 1.20 லட்சம் ரூபாய்க்கு சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவதாக Bajaj Chetak, புனேவில் விற்பனைக்கு வர உள்ளது. அதைத் தொடர்ந்து பெங்களூரு மற்றும் மற்ற இந்திய நகரங்களில் விற்பனைக்கு வரும். தற்போது பஜாஜின் கேடிஎம் வாகனங்கள் விற்கப்படும் ஷோரூம்களில் Bajaj Chetak-க்கும் விற்பனைக்குக் கொண்டு வரப்படும். 

அதிகாரபூர்வமாக வெளியானவுடன், Bajaj Chetak-க்கான புக்கிங் தொடங்கப்படும். 4 kW எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்கும் இந்த ஸ்கூட்டர், லித்தியம் - ஐயன் பேட்டரி மூலம் பவரூட்டப்படும். ஈகோ மோடில் ஒரு சார்ஜில் 95 கிலோ மீட்டரும், ஸ்போர்ட் மோடில் ஒரு சார்ஜில் 85 கிலோ மீட்டரும் இந்த ஸ்கூட்டரில் பயணம் செய்யலாம் என்று பஜாஜ் தெரிவிக்கிறது. 

தற்கால பயன்பாட்டுகுக ஏற்றவாறு இந்த ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளதாக சொல்லும் பஜாஜ், முழு மெட்டல் உடல், ஒளியூட்டப்பட்ட ஸ்விட்ச்-கியர், எல்ஈடி விளக்குகள், டிஜிட்டல் கன்சோல், பின் இருக்கை ஃபுட் பெக்ஸ் உள்ளிட்ட அமசங்களைப் பெற்றிருக்கும். அலாய் சக்கரங்களைக் கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் வண்டியை உடனடியாக நிறுத்த முடியும்.

இத்தாலிய ரெட்ரோ வகை ஸ்கூட்டர்களைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது Bajaj Chetak. அதேபோல மொத்த கட்டுமானமும் நல்ல உறுதியைக் கொண்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. ஏதர் 450, 450x, ஓகினாவா பிரெய்ஸ் உள்ளிட்ட வண்டிகளுடன் செடாக் போட்டியிடும். 

0 Comments


 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

Be the first one to comment
Thanks for the comments.