7 மாதத்திற்குள் மூன்றாவது முறையாக டாமினார் பைக்கின் விலையை அதிகரித்த பஜாஜ் !

பஜாஜ் நிறுவனமானது தனது டாமினார் பைக்கின் விலையை கடந்த ஜூலை 1ம் தேதி முதல் 2000 ரூபாய் அதிகரித்துள்ளது

View Photos

டெல்லி : பஜாஜ் நிறுவனமானது தனது டாமினார் பைக்கின் விலையை கடந்த ஜூலை 1ம் தேதி முதல் 2000 ரூபாய் அதிகரித்துள்ளது.

பஜாஜ் நிறுவனம் தனது முக்கிய மாடலான டாமினார் பைக்கின் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 7 மாதங்களில் 3 முறை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

ஸ்டாண்டர்டு டாமினார் பைக்கின் விலை தற்போது 1.48 லட்சமாகவும், டாமினார் ஏபிஎஸ் மாடலின் விலை 1.62 லட்சமாகவும் உள்ளது.

Month Price Of Bajaj Dominar STD Price of Bajaj Dominar ABS
Jan-18 ₹ 1.42 lakh ₹ 1.56 lakh
Mar-18 ₹ 1.44 lakh ₹ 1.58 lakh
May-18 ₹ 1.46 lakh ₹ 1.60 lakh
Jul-18 ₹ 1.48 lakh ₹ 1.62 lakh

கடந்த 2016ம் ஆண்டு இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போது பஜாஜ் டாமினார் ஸ்டாண்டர்டு பைக்கின் விலை 1.36 லட்சமாக இருந்தது. 2017ம் ஆண்டில் வெளியான புது வெர்ஷன் பைக்குகளின் விலை 12 ஆயிரம் அதிரடியாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1.42 லட்சமாக இருந்த டாமினார் ஸ்டாண்டர்டு பைக்கின் விலை மார்ச் மாதத்தில் 1.44 லட்சமாகவும், மே மாதத்தில் 1.46 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. தற்போது மேலும் 2 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டு 1.48 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

0 Comments

இதுவரை பஜாஜ் டாமினார் வாடிக்கையாளர் ஸ்டாண்டர்டு பைக்கை விட, ஏபிஎஸ் மாடலே 80% அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செக்மெண்டில் மகிந்த்ரா மோஜோ மற்றும் ராயல் என்பீல்ட் 350 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக உள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.