பஜாஜ் பல்சர் 125 நியான் பிஎஸ் 6 அறிமுகம்; ஆரம்ப விலை ரூ.69,997/- மட்டுமே! 

language dropdown

பிஎஸ் 6 பல்சர் 125 நியான், டிரம் பிரேக் வேரியண்டின் விலை ரூ.69,997 ஆகும். இது பிஎஸ் 4-ல் இருந்து ரூ.6,381 அதிகமாகும். டிஸ்க் பிரேக் வேரியண்டின் விலை ரூ.74,118 ஆகும். இந்த பைக்கின் விலையும் பிஎஸ் 4-ல் இருந்து ரூ.7,500 அதிகமாகும்.

expand View Photos
பஜாஜ் பல்சர் 125, இந்த பிரிவில் மிகவும் சக்திவாய்ந்த 125 சிசி பைக் ஆகும்

Highlights

  • பிஎஸ் 6 பஜாஜ் பல்சர் 125-ல் எஞ்சின் விவரக்குறிப்புகள் அப்படியே இருக்கி
  • மோட்டார் சைக்கிள் இப்போது எரிபொருள் செலுத்தப்பட்ட மோட்டார் பெறுகிறது
  • இந்த பைக்கில், டிரம் பிரேக் & டிஸ்க் பிரேக் ஆகிய 2 வேரியண்ட்டுகள் உள்ளன

Bajaj Auto, பல்சர் 125 நியான் பிஎஸ் 6-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கில், பிஎஸ் 6 எஞ்சினை தவிர, வேறு எந்த மாற்றங்களும் இல்லை. 

பைக்கின் விலை:

டிரம் பிரேக் வேரியண்டின் விலை ரூ.69,997 ஆகும். இது பிஎஸ் 4-ல் இருந்து ரூ.6,381 அதிகமாகும்.

டிஸ்க் பிரேக் வேரியண்டின் விலை ரூ.74,118 ஆகும். இந்த பைக்கின் விலையும் பிஎஸ் 4-ல் இருந்து ரூ.7,500 அதிகமாகும். (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). 

பைக்கின் நிறம்: 

பல்சர் 125 நியான், நியான் ப்ளூ, சோலார் ரெட் மற்றும் பிளாட்டினம் சில்வர் ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் வழங்கப்படும். 

Also Read: BS6 Bajaj Dominar 400 Launched In India

0j817k9c
(பல்சர் 125, மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்களை இலக்காகக் கொண்டுள்ளது)

பைக்கின் விவரங்கள்:

BS6 Pulsar 125 இப்போது அதன் 124.4 சிசி எஞ்சினுக்கு எரிபொருள் செலுத்தப்பட்ட மோட்டாரை பெறுகிறது. 

இந்த எஞ்சின் 8,500 ஆர்பிஎம்மில் 11.8 பிஹெச்பி அதிகபட்ச சக்தியையும், 6,500 ஆர்பிஎம்மில் 11 என்எம் பீக் டார்க்கை வெளியேற்றுகிறது.

இந்த எஞ்சின் 5-வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

கியர்பாக்ஸில் ஒரு முதன்மை கிக் அம்சம் உள்ளது.

இது எந்த கியரிலும், கிளட்சை அழுத்தி பைக்கை ஸ்டாட் செய்து சவாரி மேற்கொள்ளலாம். 

இந்த பைக், 140 கிலோ எடையைக் கொண்டுள்ளது. 

இது 125 சிசி பிரிவில் அதிக எடை கொண்ட மோட்டார் சைக்கிளாகும்.

0 Comments

Also Read: Bajaj Pulsar 125 Neon First Ride Review

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.