இந்தியாவின் பைக்குகளில் சக்கைப்போடு போட்டது பஜாஜ் பல்சர் பைக். பல்சர் பைக்கில் 150 சிசி, 180 சிசி, 220 சிசி என பல வகையான பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் NS200 –யும் அடங்கும்.
நிறத்தில் மட்டுமே இந்த பல்சர் மாற்றம் பெற்றுள்ளது
பல்சர் NS200 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட போது மஞ்சள் நிறத்தில் இந்த பைக் கிடைத்தது. பின்பு சில ஆண்டுகளில் மஞ்சள் நிற NS200 தயாரிப்பு நிறுத்தப்பட்டது. இப்போது சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் தான் NS200 கிடைக்கிறது.
இந்நிலையில் மஞ்சள் நிறத்து NS200 மறுபடியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
பஜாஜ் பல்சரில் ABS வசதி வந்துள்ளது
மெக்கானிக்கலாக, 199.5 சிசி இன்ஜின், சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்ட், நான்கு வால்வுடன் வரும் NS200, 6 கியர் வசதி பெற்றுள்ளது. 1.12 இலட்சத்திற்கு விற்பனை ஆகிறது பல்சர் NS200.
இந்த ஆண்டு புது பல்சர் வகை பைக்குகள் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. 250 சிசி பல்சர் பைக் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்சர் இன்ஜினை BS VI க்கு மாற்ற பஜாஜ் முடிவு செய்துள்ளது.
வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.