மனிதர்கள் இனி கார் ஓட்ட வேண்டியதில்லை - வருகிறது புதிய தொழில்நுட்பம்!

language dropdown

பல தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள பி.எம்.டபில்யூ மற்றும் டைம்லர் நிறுவனம் 1.1 பில்லியன் டாலர் மதிப்பில் ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

expand View Photos
பி.எம்.டபில்யூ மற்றும் டைம்லர் நிறுவனம் புது ஒப்பந்தம் ஒன்று போட்டுள்ளன

உலக புகழ் பெற்ற டைம்லர் டிஜி நிறுவனம் வாகனங்களில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர உள்ளது.

அந்நிறுவனம், ஜெர்மனியின் பி.எம்.டபிள்யூ நிறுவனத்துடன் கைகோர்த்து புத்தம் புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. அந்தத் திட்டத்தின்படி, இனி மனிதர்கள் வாகனத்தை ஓட்டாமல் இருக்க தொழில்நுட்பம் உருவாக்கப்பட உள்ளது. 

‘இரு நிறுவனங்களும் நீண்ட கால ஒப்பந்தம் செய்துள்ளோம். அதன்படி, தொழில்நுட்பத்தில் அடுத்த நிலையான ஆட்டோமேட்டட் டிரைவிங் 2025 ஆம் ஆண்டு முதல் உபயோகத்திற்கு வரும்' என பி.எம்.டபில்யூ மற்றும் டைம்லர் நிறுவனம் கூட்டாக அறிவித்தது.

சர்வதேச அரங்கில் ஆட்டோமேட்டட் டிரைவிங்கில் பல நிலைகள் உள்ளன. அதன் அடிப்படையில், ஐந்தாம் நிலை என்பது அனைத்து சூழ்நிலைகளிலும் வாகனத்தை காரில் உள்ள கணினி தொழிற்நுட்பம் தான் ஓட்டும். தற்போது பிஎம்டபில்யூ மற்றும் டைம்லர் நிறுவனம் தயாரிக்கும் தொழிற்நுட்பம் 3 ஆம் நிலை மற்றும் 4 ஆம் நிலையில் செயல்படும். அதன்படி, குறிப்பிட்ட சூழ்நிலையில் மட்டுமே கணினி தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும்.

‘அனைத்து விதமான தொழில்நுட்பத்தையும் உபயோகிக்க நாங்கள் தயாராக உள்ளோம்' என டைம்லர் நிறுவனத்தின் ஒலா கலன்னியஸ் தெரிவித்தார். இவர் விரைவில் டைம்லர் நிறுவனத்தின் சிறப்புத் தலைவராக உள்ளார். தற்போதைய சிறப்பு தலைவரான டைட்டெர் ஜெய்ட்சி மே மாதம் பதவி விலக உள்ளார்.

கடந்த வாரம் பல தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள பி.எம்.டபில்யூ மற்றும் டைம்லர் நிறுவனம் 1.1 பில்லியன் டாலர் மதிப்பில் ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

0 Comments

வாகனத் தயாரிப்பு தொழிலில் சமீப காலமாக பல கூட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்துடன் ஹோண்டா நிறுவனம், இண்டெல் மற்றும் ஃபியட் நிறுவனத்துடன் பி.எம்.டபில்யூ, போஷ் நிறுவனத்துடன் டைம்லர் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News