BS6 Royal Enfield Classic 350 இந்தியாவில் வெளியீடு: விலை மற்றும் பிற விவரங்கள்!!

language dropdown

Royal Enfield Classic 350 - பிஎஸ் 6 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350-க்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது

expand View Photos
ராயல் என்ஃபீல்டு டீலர்ஷிப்களில் 10,000 ரூபாய் கொடுத்து இந்த அட்டகாசமான பைக்கை புக் செய்து கொள்ளலாம்

Highlights

  • BS6 Royal Enfield Classic 350 புதிய வண்ணங்களில் கிடைக்கும்
  • 346 cc இஞ்சினில் ஃபியூல் இஞ்செக்ஷன் வசதி இருக்கும்
  • BS6 Classic 350-க்கான புக்கிங் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

Royal Enfield நிறுவனம், கிளாசிக் 350 இரு சக்கர வாகனத்தின் பிஎஸ் 6 வெர்ஷனை வெளியிட்டுள்ளது. ஷோரூம்களில் இந்த பைக்கின் விலை 1.65 லட்ச ரூபாயாக இருக்கும். ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தைப் பொறுத்தவரை, கிளாசிக் 350 தான் அதிகம் விற்பனையாகும் பைக். 2020 ஆம் ஆண்டின் நடுவாக்கில் இந்த பைக் சந்தையில் கிடைக்கப் பெறும். முன்னதாக ஏபிஎஸ் வசதியுடன் வந்த பிஎஸ் 4 வெர்ஷன் கிளாசிக் 350 பைக்கின் விலையைவிட, தற்போது வெளியாகியுள்ள பைக்கின் விலை 11,000 ரூபாய் அதிகமாக இருக்கும். இந்த புதிய கிளாசிக் 350-யில் எலக்ட்ரானிக் ஃபியூல் இஞ்சக்‌ஷன் பொருத்தப்பட்டிக்கும். அதனால், பவர் கிடைப்பது இன்னும் ஸ்மூத்தாக இருக்கும். 

ast2569g

(The BS6 Royal Enfield Classic 350 ஃபியூல் இஞ்செக்‌ஷன் வசதி உள்ளது)

பிஎஸ் 4 கிளாசிக் 350 பைக், 19.8 பிஎச்பி, 5,250 ஆர்பிஎம், 28 Nm டார்க் பவரைக் கொடுக்கும். அதே நேரத்தில் பிஎஸ் 6 வெர்ஷன் கிளாசிக் 350 குறித்தான தொழில்நுட்ப தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த புதிய பைக், ஸ்டீல்த் கருப்பு மற்றும் குரோம் கருப்பு நிறங்களில் கிடைக்கும் என்று ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. அதைத் தவிர, அலாய் சக்கரம், டியூப்லெஸ் டயர் என புதிய அம்சங்களும் புதிய கிளாசிக்கில் இருக்கும். பிற மாடல்களில் ஸ்போக்டு சக்கரம் இருக்கும். அனைத்து வகைகளிலும் ஏபிஎஸ் இருப்பது தெரிந்த விஷயம்.

0 Comments

பிஎஸ் 6 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350-க்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு டீலர்ஷிப்களில் 10,000 ரூபாய் கொடுத்து இந்த அட்டகாசமான பைக்கை புக் செய்து கொள்ளலாம். Jawa நிறுவனத்தின் ஜாவா மற்றும் Benelli-யின் இம்பெரியல் பைக்குகளுக்குப் போட்டியாக புதிய கிளாசிக் 350 வலம் வரும். 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News