ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குப் பிறகு கார், பைக் விலை குறைகிறது!

language dropdown

ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குப் பிறகு கார், டூவிலர் விலை குறைவதாக தகவல்கள் வந்துள்ளன.

expand View Photos
மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் கார்களுக்கு 3 ஆண்டுகளும், டூவீலர்களுக்கு 5 ஆண்டுகளுக்கும் கட்டாயமாகும்.

Highlights

  • நீண்ட கால பாலிசி திட்டங்கள் வாபஸ் செய்யப்படுகிறது
  • இதனால் ஆகஸ்ட் 1 முதல் கார்,டூவீலர் விலை குறைய வாய்ப்பு
  • மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் காருக்கு 3 ஆண்டுகள், டூவீலருக்கு 5 ஆண்டுகள்

புதிதாக கார் அல்லது டூவீலர் வாங்க உள்ளீர்களா? அப்படி என்றால் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குப் பிறகு வாங்குங்கள். ஏனெனில், இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குப் பின் ஆன்-ரோடு விலை குறையும் என்றும் இதனால் கார் மற்றும் டூவீலர் வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இந்தியாவில் இன்சூரன்ஸ் துறையை ஐஆர்டிஏஐ எனும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நிர்வகித்து வருகிறது. இன்சூரன்ஸில் சொந்த சேதத்திற்கான (own-damage insurance) காப்பீடு, மூன்றாம் தரப்பு காப்பீடு (third Party insurance) என இருவகை உள்ளன. புதிதாக வாகனங்கள் வாங்கும் போது இந்த இன்சூரன்ஸ் எடுக்கப்பட வேண்டும். கார் என்றால் 3 ஆண்டுகளுக்கும், டூவீலர் என்றால் 5 ஆண்டுகளுக்கும் மேற்கண்ட இன்சூரன்ஸ் எடுக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில், தற்போது ஐஆர்டிஏஐ ஆணையம் நீண்ட கால இன்சூரன்ஸ் பேக்கேஜை ஆகஸ்ட் 1 முதல் ரத்து செய்ய உள்ளது. இதனால், இனி சொந்த காப்பீடுக்கான இன்சூரன்ஸை ஒரு ஆண்டுக்கு மட்டும் எடுத்தால் போதுமானது. அதற்கு மேல் எடுக்கவும் முடியாது. 

இருப்பினும், மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் திட்டத்தில் எந்த மாற்றமும் கொண்ட வரப்படவில்லை. ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படி, இது கார்களுக்கு மூன்று ஆண்டுகளும், டூவீலர்களுக்கு ஐந்து ஆண்டுகளும் எடுக்கப்பட வேண்டும். 

8bg1u1j8

வரும் ஆகஸ்ட் 1 முதல் இன்சூரன்ஸ் எடுப்பதில் மாற்றம் வர உள்ளது.

இவ்வாறு சொந்த காப்பீடுக்கான நீண்ட கால இன்சூரன்ஸ் பின்வாங்குப்படுவதால், அதற்கான சாலை வரி, பதிவுக்கட்டணம், இன்சூரன்ஸ் அனைத்துக்கமான கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. விளைவாக கார், டூவீலர் விலையும் குறையலாம். மீதமுள்ளது மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் மட்டும்தான். சொந்த காப்பீட்டை ஒப்பிடுகையில், மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் கட்டணமும் விலை குறைவுதான். 

இதுதொடர்பாக ஜேஎஸ் நான்கு சக்கர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் நிக்குஞ் சங்கி கூறுகையில், 'இந்த முடிவு ஆரோக்கியமானது. வாடிக்கையாளர்கள்  தங்களுக்கான வாகனங்களை வாங்கும் முடிவுகளில் இது மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக தற்போதைய சூழலில் இது நேர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும். பொதுவாக இன்சூரன்ஸ் நிறுவனத்தை பாலிசிதாரர்கள் தேர்வு செய்வதில் சிரமங்கள் உள்ளன. உதாரணத்திற்கு ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் முதல் வருட காப்பீடு முடிந்து விட்டது என்றால், அடுத்தாக வேறொரு இன்சூரன்ஸ் கம்பெனிக்கு மாற விரும்பினால்,  எப்படி மாற முடியும். அந்த வகையில் தற்போதுள்ள திட்டம் ஆரோக்கியமானதாக உள்ளது'. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

oan7tn4o

சொகுசு வாகனங்களில் இந்த இன்சூரன்ஸ் மாற்றத்தால் பெரிய வேறுபாடு வரும்.

0 Comments

முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, நீண்ட கால இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படியே, கார்களுக்கு 3 ஆண்டுகள், டூவீலர்களுக்கு 5 ஆண்டுகள் என பாலிசி திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இன்சூரன்ஸ் துறையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த முறை, அப்படியே வாகன விற்பனையிலும் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Latest Cars

rating-logo
8.1
star-white
Audi RS7 Sportback

Audi RS7 Sportback

₹ 1.94 Crore
(On-Road Price New Delhi)
rating-logo
7.8
star-white
Honda City

Honda City

₹ 10.89 Lakh
(On-Road Price New Delhi)
rating-logo
7.6
star-white
Hyundai Tucson

Hyundai Tucson

₹ 22.3 Lakh
(On-Road Price New Delhi)
MG Hector Plus

MG Hector Plus

₹ 13.49 Lakh
(On-Road Price New Delhi)
rating-logo
7.7
star-white
Honda WR-V

Honda WR-V

₹ 8.5 Lakh
(On-Road Price New Delhi)
rating-logo
7.6
star-white
Mercedes-Benz GLS

Mercedes-Benz GLS

₹ 1 Crore
(On-Road Price New Delhi)
rating-logo
7.8
star-white
BMW X6

BMW X6

₹ 95 Lakh
(On-Road Price New Delhi)
rating-logo
7.6
star-white
Datsun Redi GO

Datsun Redi GO

₹ 2.83 Lakh
(On-Road Price New Delhi)
rating-logo
8.2
star-white
Mercedes-AMG GT

Mercedes-AMG GT

₹ 2.27 Crore
(On-Road Price New Delhi)
Be the first one to comment
Thanks for the comments.