ஹூண்டாய் நிறுவனத்தின் பிப்ரவரி மாத விற்பனை எப்படி இருந்தது?

பிப்ரவரி 2018 யை ஒப்பிடும் போது பிப்ரவரி 2019 யின் விற்பனை 1.6 சதவிகிதம் குறைவாகும்

View Photos
சென்ற மாதம் 3.1 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது ஹூண்டாய்

Highlights

  • புது கார்களை ஹூண்டாய் அறிமுகம் செய்யவுள்ளது
  • ஏற்றுமதி 4.5 சதவிகிதம் உயர்ந்தது
  • பிப்ரவரி 2019 –யில் 11,408 கார்களையும் ஹுண்டாய் ஏற்றுமதி செய்தது

இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் நிறுவனம் ஹூண்டாய் ஆகும். கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்திற்கு லாபகரமான மார்கெட்டாக இந்தியாவின் கார் மார்கெட் திகழ்கிறது.

பிப்ரவரி 2019 –யில் இந்தியாவில் மட்டும் 43,110 கார்களை விற்றுள்ளது ஹூண்டாய். 2018 பிப்ரவரி விர்பனையான 44,505 கார்களை ஒப்பிடும் போது இது 3.1 சதவிகிதம் குறைவாகும்.

கார்

ஏற்றுமதியை பொருத்தவரை பிப்ரவரி 2018 –யில் 10,917 கார்களும் பிப்ரவரி 2019 –யில் 11,408 கார்களையும் ஹுண்டாய் ஏற்றுமதி செய்தது. இது 4.5 சதவிகிதம் உயர்வாகும்.

மொத்தமாக பிப்ரவரி 2018 –யில் 55,422 கார்களும் பிப்ரவரி 2019 –யில் 54,518 கார்களையும் ஹூண்டாய் நிறுவனம் விற்றுள்ளது. பிப்ரவரி 2018 யை ஒப்பிடும் போது பிப்ரவரி 2019 யின் விற்பனை 1.6 சதவிகிதம் குறைவாகும்.

இன்சூரன்ஸ் ப்ரிமியம் மாற்றம், விலை ஏற்றம், உபரி பாகங்களின் விலை உயர்வு முதலியவையே இந்த விற்பனை வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.

புது எக்ஸ்சென்ச், கிராண்ட் ஐ10, ஸ்டைக்ஸ் ஆகிய கார்களைக்கு சந்தைக்கு கொண்ட வர ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இதன் விற்பனையை பொருத்தே ஹூண்டாய் நிறுவனத்தின் வளர்ச்சி இருக்கும்.

0 Comments

மாருதி சூசுகி விட்டாரா பிரிஸா, டாடா நெக்ஸன், ஃபோர்ட் எக்கோஸ்போர்ட் முதலிய கார்களுக்கு போட்டியாக ஹூண்டாய் நிறுவனம், ஸ்டைக்ஸ் காரை அறிமுகம் செய்கிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Hyundai Creta with Immediate Rivals