ஜூலை மாத கார் விற்பனை: சென்ற ஆண்டைவிட 42.8 சதவீத சரிவைக் கண்ட ஹோண்டா!

language dropdown

கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இந்த நிதியாண்டில் கிட்டத்தட்ட 42.6 சதவீதம் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. 

expand View Photos
ஜூலை மாதத்தில் 3 புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன

Highlights

  • Honda Cars India saw MoM sales increase of 319.38 per cent.
  • It recorded a year-on-year (YoY) sales decline of 42.6 per cent.
  • It launched the fifth-generation Honda City and WR-V Facelift last month.

இந்தியாவில் ஹோண்டா கார்களின் விற்பனை நிலவரம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹோண்டா கார்ஸ் நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் 5,863 கார்களை விற்றுள்ளது. கடந்தாண்டு இதே ஜூலை மாதத்தில் 10,250 கார்கள் விற்பனையான நிலையில், கொரோனா பாதிப்பால் இந்தாண்டு விற்பனை படுவீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 

கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இந்த நிதியாண்டில் கிட்டத்தட்ட 42.6 சதவீதம் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும் ஊரடங்கு தளர்வுக்குப் பின் ஜப்பானிய கார் உட்பட மற்ற கார் உற்பத்தியாளர்கள் படிப்படியாக தங்கள் விற்பனையை அதிகரித்துள்ளனர். 

ஹோண்டாவின் மாதவாரியாக பார்க்கும் போது இந்தாண்டு ஜூன் மாதத்தில் 1,398 கார்கள் விற்பனையாகியுள்ளன. ஜூலை மாதம் 5,863 கார்கள் விற்பனையாகியுள்ளன. கிட்டத்தட்ட  மாத விற்பனையில் 319.38 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே போல் ஏற்றுமதியைப் பொறுத்தவரையில், ஜூலை மாதத்தில் சுமார் 282 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது ஊரடங்கு தளர்வுக்குப் பின் என்பதால் பெற்ற விற்பனை என்று கூறப்படுகிறது. 

27nngdig

ஆல் 5th ஜெனரேசன் ஹோண்டா சிட்டி கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது

இதுகுறித்து ஹோண்டா நிறுவனத்தின் துணை தலைவரும், இயக்குநருமான ராஜேஷ் கோயல் கூறுகையில், 'ஜூலை மாதம் ஒரு ஆக்ஷன் மாதமாகும். இந்த மாதத்தில் 3 கார் மாடல்களை நாங்கள் அறிமுகம் செய்தோம். அவை நியூ WR-V, சிவிக் BS-6 டீசல் மற்றும் ஆல் 5வது ஜெனரேசன் ஹோண்டா சிட்டி ஆகும்.

இந்தக் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டப் பிறகு எங்கள் சந்தை மதிப்பு உயர்வைச் சந்தித்தது. குறிப்பாக இதில் ஆல் நியூ சிட்டி காருக்கு வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இது நடுத்தர சடான் செக்மன்ட் ரக காராகும்'. இவ்வாறு ராஜேஷ் கோயல் தெரிவித்தார்

qt9o6u2

0 Comments

ஹோண்டா சிட்டியைப் பொறுத்தவரையில் ஹோண்டாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தில் அமேஸ் உள்ளது. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.