ஜூன் மாத கார் விற்பனை: எந்த வாகனங்கள் அதிகமாக விற்றுள்ளன? - ஒரு விரிவான அலசல்!

language dropdown

கடந்த 15 ஆண்டுகளாக ஆல்டோதான், நாட்டின் அதிக விற்ற காராக உள்ளது.

expand View Photos
5 வேரியன்டுகளில் வெளியிடப்பட்ட கிரெட்டாவில் இரண்டு பெட்ரோல் வகைகளும், ஒரு டீசல் வகையும் இருந்தன.

இந்தியாவில் கார் விற்பனையைப் பொறுத்தவரை, மாருதி சூசுகி நிறுவனத்தின் ஆல்டோ, முதலிடத்தைப் பிடிப்பது என்பது புதிய கதை அல்ல. கடந்த பல ஆண்டுகளாக நாட்டில் அதிகம் விற்கும் காராக இருக்கும் ஆல்டோதான், 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலும் அதிக அளவில் விற்றுள்ளது. சில நேரங்களில் இந்த முதல் இடத்தை மாருதி சுசூகியின் மற்ற கார்களான டிசைர், பலேனோ, ஸ்விஃப்ட் மற்றும் வேகன்ஆர் உள்ளிட்ட வாகனங்கள் பிடிக்கும். ஆனால், சீக்கிரமே அந்த இடத்தை தனதாக்கிக் கொள்ளும் ஆல்டோ. ஆனால் பெரும்பாலும் மாருதி சுசூகியின் கார்தான் முதலிடத்தில் வரும். ஆனால் கடந்த மே மாதம், ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா முதலிடத்தைப் பிடித்தது. ஜூன் மாதம் கிரெட்டா, 7,207 யூனிட்டுகள் விற்க, ஆல்டோ, 7,298 யூனிட்டுகள் விற்றுள்ளன. முதலிடத்திற்கும் இரண்டாவது இடத்திற்கும் உள்ள வித்தியாசம் வெறும் 91-தான் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இந்தயாவில் அதிக விற்பனையில் முதலிடம் பிடிக்கும் கார், 20,000 யூனிட்டுகள் விற்கும். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாகன விற்பனை மந்தமாக உள்ளது. ஜூன் மாதத்திற்கான அதிக விற்பனையான கார்கள் பட்டியலில் 3வது இடத்தைப் பிடிப்பது கியா செல்டோஸ். அது, 7,114 யூனிட்டுகள் விற்றுள்ளன. 

f52eo8f8

ஜூன் மாதம் கிரெட்டா, 7,207 யூனிட்டுகள் விற்றுள்ளது

Car and Bike சமீபத்தில் நடத்திச சர்வே ஒன்றில், கொரோனா தொற்று காரணமாக வரும் காலங்களில் சிறிய கார்களின் விற்பனை அதிகமாக இருக்கும் என்று கண்டறியப்பட்டது. மேலும் அந்த சர்வேயில், மக்கள் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஸ்டைலைத்தான் அதிகம் விரும்புகிறார்கள் என்றும் தெரியவந்தது. ஹூண்டாய் கிரெட்டாவின் லேட்டஸ்ட் மாடல் கடந்த மார்ச் 16 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. மார்ச் 22 ஆம் தேதி, இந்திய அளவில் முழு முடக்க உத்தரவு போடப்பட்டது. கார் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து தற்போது வரை 40,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்றுள்ளது கிரெட்டா. 

5 வேரியன்டுகளில் வெளியிடப்பட்ட கிரெட்டாவில் இரண்டு பெட்ரோல் வகைகளும், ஒரு டீசல் வகையும் இருந்தன. 9.99 லட்ச ரூபாயிலிருந்து ஆரம்பித்த அதன் விலையானது, 17.20 லட்ச ரூபாய் வரை கிடைக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஆல்டோவின் லேட்டஸ்ட் வெர்ஷனை வெளியிட்டது மாருதி சுசூகி. 2.94 லட்ச ரூபாயிலிருந்து கிடைக்கும் இந்த காரின் டாப் எண்டு, 3.72 லட்ச ரூபாய்க்கு ஷோ ரூம்களில் கிடைக்கின்றன. 

oiq4hscg

தற்போது தன் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது ஆல்டோ

கடந்த 15 ஆண்டுகளாக ஆல்டோதான், நாட்டின் அதிக விற்ற காராக உள்ளது. அதே நேரத்தில் அனைத்து மாதங்களிலும் ஆல்டோ, முதலிடத்தைப் பிடித்து விடாது. குறிப்பாக 2018 ஆம் ஆண்டு, மாருதி சுசூகி டிசைர், அதிக விற்ற கார் என்ற பெருமையைப் பெற்றது. அதேபோல 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதமும், டிசைரிடம் தன் முதலிடத்தை விட்டுக் கொடுத்தது ஆல்டோ. அதிலிருந்து சில மாதங்கள் மீண்டும் முதலிடத்தில் பிடித்தாலும், தற்போது தன் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது ஆல்டோ.

fgjrb3gc

செல்டோஸ், மாருதி சுசூகி வேகன்ஆர் காரை 4வது இடத்துக்குப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. 

0 Comments

காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில், கியா செல்டோஸ் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது. ஜூன் மாதத்தில் அதிகம் விற்ற கார்களின் வரிசையில் 3வது இடத்தைப் பிடித்த செல்டோஸ், மாருதி சுசூகி வேகன்ஆர் காரை 4வது இடத்துக்குப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. டிசைர், 5வது இடத்தில் உள்ளது. சமீபத்தில் கியா நிறுவனம், செல்டோஸுக்கு சில அப்டேட்களை செய்தது. அதன் மூலம் அதன் டாப் வேரியன்டில் 10 புதிய அம்சங்கள் வந்துள்ளன. அதேபோல செல்டோஸின் விலை குறைவான வேரியன்ட்களிலும் சில அற்புதமான வசதிகளை சேர்த்துள்ளது கியா நிறுவனம். 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.