Car Sales October 2019: அக்டோபரில் ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் விற்பனை எப்படி இருந்தது?

language dropdown

அக்டோபர் 2018 யில் 14,187 யூனிட்களை விற்ற ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அக்டோபர் 2019 யில் 10,010 யூனிட்களை மட்டுமே விற்றுள்ளது.

10,010 யூனிட்களை விற்றது ஹோண்டா expand View Photos
10,010 யூனிட்களை விற்றது ஹோண்டா

Highlights

  • சரிவை சந்தித்த பல நிறுவனங்களில் ஒன்று ஹோண்டா கார்ஸ் இந்தியா.
  • 633 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
  • சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தான் பண்டிகை காலமாக இருந்தது

தொடர் சரிவை சந்தித்து வந்த ஆட்டோமொபைல் துறையானது பண்டிகை காலத்தில் வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே பண்டிகை மாதமான அக்டோபர் மாதத்தில் வளர்ச்சியை பதிவு செய்தது. சரிவை சந்தித்த பல நிறுவனங்களில் ஒன்று ஹோண்டா கார்ஸ் இந்தியா.

அக்டோபர் 2018 யில் 14,187 யூனிட்களை விற்ற ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அக்டோபர் 2019 யில் 10,010 யூனிட்களை மட்டுமே விற்றுள்ளது. இது 29.44 சதவிகிதம் வீழ்ச்சியாகும். அதே நேரத்தில் 633 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் விற்பனை பிரிவு துணை தலைவர் ராஜேஷ் கொயல் இதனை குறித்து கூறுகையில், ‘'பண்டிகை கால விற்பனை அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் சிறந்ததாக அமைந்ததுள்ளது. அதிக தள்ளுபடி, பண்டிகை காலம் முதலியவை இதற்கு முக்கிய காரணம். ஹோண்டாவிலும் சென்ற மாதங்களை ஒப்பிடும் போது வளர்ச்சியை பதிவு செய்துள்ளோம்'' என்றார்.

0 Comments

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தான் பண்டிகை காலமாக இருந்தது. நவம்பர் 2018 யில் 13,549 யூனிட்களை விற்ற ஹோண்டா, நவம்பர் 2017யில் 12,102 யூனிட்களை விற்றது. இதன் மூலம் 10.67 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்திருந்தது ஹோண்டா.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

Research on Cars

  • New Honda Civic
    New Honda Civic
  • New Honda Civic Alloywheels
    New Honda Civic Alloywheels
  • New Honda Civic Backview
    New Honda Civic Backview
  • Honda Accord Front 3 4th View
    Honda Accord Front 3 4th View
  • Honda Accord Front Profile
    Honda Accord Front Profile
  • Honda Accord Rear 3 4th View
    Honda Accord Rear 3 4th View
  • New Honda Amaze Front View
    New Honda Amaze Front View
  • New Honda Amaze Rear Profile
    New Honda Amaze Rear Profile
  • New Honda Amaze Side Profile
    New Honda Amaze Side Profile
  • Honda Mobilio Side Profile
    Honda Mobilio Side Profile
  • Honda Mobilio Front View
    Honda Mobilio Front View
  • Honda Mobilio Side Profile
    Honda Mobilio Side Profile
  • Honda
    Honda
  • Honda City Hill Start Assist
    Honda City Hill Start Assist
  • Honda City Led Headlight
    Honda City Led Headlight
  • Honda Brio
    Honda Brio
  • Honda Brio Front Profile
    Honda Brio Front Profile
  • Honda Brio Front
    Honda Brio Front
  • Honda Cr V Side View
    Honda Cr V Side View
  • Honda Cr V Sun Roof
    Honda Cr V Sun Roof
  • Honda Cr V Tail Light
    Honda Cr V Tail Light
  • Honda Br V Griile
    Honda Br V Griile
  • Honda Br V Front Side
    Honda Br V Front Side
  • Honda Br V Fog Lamps
    Honda Br V Fog Lamps
  • Honda Jazz Fog Lamp
    Honda Jazz Fog Lamp
  • Honda Jazz Grill
    Honda Jazz Grill
  • Honda Jazz Headlight
    Honda Jazz Headlight
  • Honda Wr V Alloy Wheels
    Honda Wr V Alloy Wheels
  • Honda Wr V Fog Lamp
    Honda Wr V Fog Lamp
  • Honda Wr V Frontview
    Honda Wr V Frontview
Be the first one to comment
Thanks for the comments.