Car Sales October 2019: அக்டோபரில் ஹூண்டாய் இந்தியாவின் விற்பனை எப்படி இருந்தது?

language dropdown

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீபாவளி மாதத்தில் ஹூண்டாய் இந்தியாவின் விற்பனை சிறப்பாக உள்ளது

expand View Photos
ஹூண்டாயின் 2019 ஆம் ஆண்டின் அதிக அளவு விற்பனை அக்டோபர் மாதத்தில் பதிவானது

Highlights

  • ஹூண்டாய் அக்டோபர் 2019 யில் 50,010 யூனிட்களை விற்றிருந்தது
  • கடந்த ஆண்டு இதே மாதத்தில் 52,001 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்தது.
  • இது 3.8 சதவிகிதம் வீழ்ச்சியாகும்

வாகனத் துறையில் நீடித்த மந்தநிலை அக்டோபர் மாதத்திலும் தொடர்கிறது. ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் பண்டிகை காலமான அக்டோபரிலும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் அக்டோபர் 2019 யில் 50,010 யூனிட்களை விற்றிருந்தாலும்கடந்த ஆண்டு இதே மாதத்தில் 52,001 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்தது. இது 3.8 சதவிகிதம் வீழ்ச்சியாகும். ஐ 20 பிரீமியம் ஹேட்ச்பேக்கின் விற்பனை 14,700 யூனிட்டுகளை அதிக விற்பனையைப் பெற்றுள்ளது. சமீபத்தில் மாருதி சுசுகியின் விட்டாரா ப்ரெஸாவை விட இந்தியாவில் அதிகம் விற்பனையான சப்-காம்பாக்ட் எஸ்யூவி என்ற பெருமையை ஹூண்டாய் வென்யூ பெற்றது. ஹூண்டாயின் ஏற்றுமதி இதே மாதத்தில் 4.5 சதவீதம் அதிகரித்து 13,600 ஆக இருந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 13,019 ஆக இருந்தது.

ஹூண்டாயின் முக்கிய விற்பனை செயல்திறன் குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் தேசிய விற்பனைத் தலைவர் விகாஸ் ஜெயின் கருத்து தெரிவிக்கையில், “நீண்ட சந்தை மந்தநிலை இருந்தபோதிலும், ஹூண்டாய் மோட்டார் இந்தியா மீண்டும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஹூண்டாய் பிராண்டில் எங்கள் சூப்பர் பெர்ஃபார்மர் மாடல்களான - வென்யூ, கிராண்ட் ஐ 10 நியோஸ், ஐ 20 மற்றும் கிரெட்டா ஆகியவை ஒரே மாதத்தில் வலுவான செயல்திறனுடன் எங்கள் வாடிக்கையாளர்களின்  மகிழ்ச்சியை அளித்தன. ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஆண்டு முடிவில் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்'' என்றார்.

0 Comments

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீபாவளி மாதத்தில் ஹூண்டாய் இந்தியாவின் விற்பனை சிறப்பாக உள்ளது. கொரிய கார் தயாரிப்பு நிறுவனம் நவம்பர் மாதத்தில் (தீபாவளி மாதம்) 0.67 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளது. உள்நாட்டு சந்தையில் 43,709 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதத்தில் 44,008 யூனிட்களாக இருந்தது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News