தொடர் வீழ்ச்சியில் ஆட்டோமொபைல் துறை...மீள வாய்ப்புள்ளதா?

இந்தியாவில் புது விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. BS 6 கட்டாயம் ஆக்கபட இருப்பதால் அதில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

View Photos
ஏப்ரல் – ஜூன் 2019 காலகட்டத்தில் பாசஞ்சர் வாகனங்கள் 18.42 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்தது

Highlights

  • 24.07 சதவிகித வீழ்ச்சியை சந்தித்துள்ளது பாசஞ்சர் கார்கள்
  • ஏப்ரல்–ஜூன் 2019 யில் பாசஞ்சர் வாகனங்கள் 18.42 சதவிகித வீழ்ச்சியடைந்தது
  • இந்தியாவில் புது விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன

கடந்த ஒரு வருடமாக இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையானது சரிவையே சந்தித்து வருகிறது. ஜுன் 2019 யிலும் இதே நிலைமை தான் தொடர்ந்தது.

ஜூன் 2019 யில் 2,25,732 பாசஞ்சர் வாகனங்கள் தன விற்கப்பட்டது. அதே நேரம் ஜூன் 2018 யில் 2,73,748 பாசஞ்சர் வாகனங்கள் விற்கப்பட்டது. ஜூன் 2018 யை ஒப்பிடும் போது ஜூன் 2019 விற்பனையானது 17.54 சதவிகிதம் குறைவாகும்.

பாசஞ்சர் கார்களை பொருத்தவரை 24.07 சதவிகித வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஜூன் 2018 யில் 1,83,885 பாசஞ்சர் கார்களும் ஜூன் 2019 யில் 1,39,628 கார்களும் விற்கப்பட்டன.

ஏப்ரல் – ஜூன் 2019 காலகட்டத்தில் பாசஞ்சர் வாகனங்கள் 18.42 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்தது. ஏப்ரல் – ஜூன் 2018 யில் 8,73,490 பாசஞ்சர் வாகனங்களும் ஏப்ரல் – ஜூன் 2019 யில் 7,12,620 பாசஞ்சர் வாகனங்களும் விற்கபட்டன.

usgfd5m8எரிபொருள் விலை, இன்சுரன்ஸ் விலை ஏற்றம் முதலியனவை ஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது

இந்தியாவில் புது விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. BS 6 கட்டாயம் ஆக்கபட இருப்பதால் அதில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் துரை மட்டுமே அதில் 80 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

‘அரசு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியை சந்திப்பதால் ஜிஎஸ்டி தொகையும் குறையும்' என்றார் SIAM தலைவர் ராஜன் வதேரா.

0 Comments

எரிபொருள் விலை, இன்சுரன்ஸ் விலை ஏற்றம் முதலியனவை ஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. BS 6 அமலுக்கு வந்தால் ஆட்டோமொபைல்களில் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.