கடுமையான வீழ்ச்சி பாதையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம்...!

இந்தோனேசியா, வியாட்நாம், மலேசியாவில் இண்டர்செப்டர், காண்டினேண்டல் ஜிடி 650  ஆகியவற்றை அறிமுகம் செய்தது ராயல் என்ஃபீல்ட்.

View Photos

Highlights

  • வரும் காலங்களில் பல புது மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது ராயல் என்ஃபீல்ட்
  • ஏப்ரல்–ஜூன் 2019யில் 1,81,966 ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் மட்டுமே விற்றது
  • ஏப்ரல் – ஜூன் காலத்தில் 21.6 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது எய்ச்சர்

சில காலங்கள் முன்பு வரை தனிகாட்டு ராஜாவாக இருந்தது ரயல் என்ஃபீல்ட் நிறுவனம். அதன் பின் கல்ட் கிளாசிக் பைக்கான ஜாவா தங்களது தயாரிப்புகளை அறிமுகம் செய்த பின் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்திற்கு இறங்கு முகமாகவே இருந்து வருகிறது. இந்த பைனான்சியல் ஆண்டின்  முதல் குவார்ட்டரிலும் அதே பரிதாப நிலை தான் எய்ச்சர் மோட்டர்ஸ்க்கு.

ஏப்ரல் – ஜூன் காலத்தில் 21.6 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது எய்ச்சர் நிறுவனம். சென்ற ஆண்டு வரிக்கு பின் 576 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்த எய்ச்சர் நிறுவனம், இந்த ஆண்டு முதல் குவாட்டரில் 452 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்துள்ளது.

பைக்

மொத்த சம்பாதியத்தில் 7 சதவிகிதம் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. சென்ற ஆண்டு முதல் குவாட்டரில் 2,548 கோடி ரூபாயும் இந்த ஆண்டின் முதல் குவாட்டரில் 2,328 கோடி ரூபாயும் மொத்த சம்பாத்தியம் பதிவு செய்துள்ளது எய்ச்சர் மோட்டர்ஸ்.

எய்ச்சர் மோட்டர்ஸின் எம்டியான சித்தார்த்தா லால், ‘தற்போது இரண்டு சக்கரம் மற்றும் சிவி துறையானது வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. குறைந்த தேவை, அதிக தள்ளுபடி, முதலியனவை தான் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும். BS 6 கட்டுபாடுகளுக்குள் எங்கள் வாகனங்களை கொண்டு வர முயற்சிகள் செய்து கொண்டிருக்கீறோம்' என்றார்.

சில மாதங்களுக்கு முன்பு வரை மாதம் 70,000 எண்ணிக்கையில் விறபனையான ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் தற்போது தொடர்ச்சியாக மாதமாதம் வீழ்ச்சியை பதிவு செய்கிறது. ஏபர்ல் – ஜூன் 2019 காலத்தில் 1,81,966 ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் மட்டுமே விற்பனையானது. சென்ற ஆண்டின் விற்பனையான 2,25,286 யை ஒப்பிடும் போது இது 19 சதவிகிதம் வீழ்ச்சியாகும்.

ராயல் என்ஃபீல்ட்யின் சிஇஓ வினோத் தசாரி கூறுகையில், ‘குறைந்த தேவை, பொருளாதார வீழ்ச்சி முதலியனவை  இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனையை வெகுவாக பாதித்துள்ளது. ராயல் என்ஃபீல்ட் ஸ்டுயோவை நாங்கள் அறிமுகம் செய்ய உள்ளோம். வரும் காலங்களில் பல புது மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளோம். அவை மக்களிடையே வரவேற்பை பெறும் என நம்புகிறோம்' என்றார்.

royal enfield 650 cc twins

சர்வதேச சந்தையில் பல ஸ்டோர்களை ராயல் என்ஃபீல்ட் திறக்கிறது.

0 Comments

சர்வதேச சந்தையில் ராயல் என்ஃபீல்ட் வலு பெற்று வருகிறது. சியோலில் ஒரு ஸ்டோர், பிரேசிலில் இரண்டு ஸ்டோர், அர்ஜெண்டினா, வியாட்நாம், இந்தோனேசியா ஆகியவற்றில் ஒரு ஸ்டோர் என நாயல் என்ஃபீல்ட் தங்களது சர்வதேச மார்கெட்டை விரிவு படுத்திவருகிறது. இந்தோனேசியா, வியாட்நாம், மலேசியாவில் இண்டர்செப்டர், காண்டினேண்டல் ஜிடி 650  ஆகியவற்றை அறிமுகம் செய்தது ராயல் என்ஃபீல்ட்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Royal Enfield Classic 350 with Immediate Rivals