லாக்டவுன் 3.0: வாகனம் ஓட்டுவதற்கான கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!

language dropdown

மத்திய அரசு, இன்று முதல் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே, சிவப்பு மண்டலங்களில் கூட இயக்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது. expand View Photos
கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே, சிவப்பு மண்டலங்களில் கூட இயக்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Highlights

  • ஊரடங்கின் மூன்றாம் கட்டம் தொடங்கப்பட்டுள்ளது
  • காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வெளியே செல்லலாம்
  • பச்சை மண்டலத்தில் பொது பேருந்துகள் இயக்கப்படும்

நாட்டில் மூன்றாம் கட்ட ஊரடங்கு திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு முழு நாட்டையும் மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளது. இதில் சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம் மற்றும் பச்சை மண்டலம் ஆகியவை அடங்கும். நாட்டின் சில பகுதிகளில் வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருவதால், மத்திய உள்துறை அமைச்சகம் சில தளர்வுகளை வழங்கியுள்ளது. இவற்றில், பச்சை மண்டலத்தில் அதிக தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அங்கு பொது போக்குவரத்துக்கு (பேருந்து) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிவப்பு மண்டலம் மற்றும் ஆரஞ்சு மண்டலத்தில் தனியார் கார்களை மட்டுமே வெளியில் இயக்க முடியும்.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பேருக்கு மேல் காரில் பயணிக்க முடியாது என்று கூறுகிறது. சிவப்பு மண்டலத்தில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆரஞ்சு மண்டலம் மற்றும் பச்சை மண்டலத்தில் மோட்டார் சைக்கிளில் இருவர் பயணிக்கலாம். சிவப்பு மண்டலத்தில், டாக்ஸிகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிவப்பு மண்டலத்தில் இயக்க அனுமதிக்கப்பட்டாலும், அனைத்து விதமான பொது போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. பச்சை மண்டலத்திலும் பேருந்து போக்குவரத்தை தொடங்கலாம். அதிலும், மொத்த இருக்கைகளில் 50 சதவீதத்திற்கு மேல் பயணிகளை ஏற்றக்கூடாது.

Also read: Coronavirus Lockdown: NHAI Resumes Toll Collection, Increases Fee

0 Comments

அனைத்து வகையான பயணங்களும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அனைத்து வகையான சமூக இடைவெளிக்கான அனைத்து விதிகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. 65 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள், 10 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் எந்த நேரத்திலும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

Be the first one to comment
Thanks for the comments.