லாக்டவுன் 4.0: ஓலா, உபெர் சேவைகள் மீண்டும் தொடக்கம்!

இரண்டு நிறுவனங்களும் உச்சகட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் சேவைகள் வழங்குவதாக கூறுகின்றன.

ஓலா, உபேர் கேப்ஸ், இப்போது டெல்லி, பெங்களூரு, சண்டிகர் போன்ற பெருநகரங்களில் இயக்கப்படுகின்றன. expand View Photos
ஓலா, உபேர் கேப்ஸ், இப்போது டெல்லி, பெங்களூரு, சண்டிகர் போன்ற பெருநகரங்களில் இயக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட ஊரடங்கு, இப்போது நான்காவது கட்டத்தில் உள்ளது. இந்த முறை அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்களின் இயக்கம் குறித்து அரசு பல விலக்குகளை அறிவித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மூன்றாம் கட்ட ஊரடங்கில் பல ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டல நகரங்களில் செயல்படத் தொடங்கிய ஓலா மற்றும் உபெர் போன்ற நிறுவனங்கள், இப்போது அதிக நகரங்களுக்கு சேவை செய்கின்றன. இருப்பினும், அரசின் அனுமதி இருந்தபோதிலும், ஓலா தனது வாகனங்கள் இன்னும் சிவப்பு மண்டல பகுதிகளுக்கு இயக்கபோவதில்லை என்று கூறியுள்ளது.

5gsnghtg
ஓலா கேம்ஸ், சிவப்பு மண்டல பகுதிகளில் இயங்காது.

சேவைகளின் விவரங்கள்:

ஓலா சேவைகள் மீண்டும் தொடங்கிய மாநிலங்களில் கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி, ஹரியானா, சண்டிகர், பஞ்சாப், தமிழ்நாடு (சென்னை தவிர), ஆந்திரா, கேரளா மற்றும் அசாம் ஆகியவை அடங்கும். மொத்தத்தில், நிறுவனத்தின் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 160-க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த சேவைகளை மீண்டும் தொடங்குவதன் ஒரு பகுதியாகும். 

உபெர் சேவைகள் மீண்டும் தொடங்கிய புதிய நகரங்களில் பெங்களூரு, சண்டிகர், கோயம்புத்தூர், டெல்லி, ஃபரிதாபாத், ஜலந்தர், லூதியானா, மைசூர், பாட்டியாலா, சோனிபட் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியவை அடங்கும்.

tn6vjuvs
ஓலாவைப் போலல்லாமல், உபெர் ஏசியை இயக்கும் ஆப்ஷனை வழங்கியுள்ளது.

பின்பற்றப்படும் வழிமுறைகள்:

இரண்டு நிறுவனங்களும் உச்சகட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் சேவைகள் வழங்குவதாக கூறுகின்றன. ஓட்டுநர்-கூட்டாளர்கள் மற்றும் பயணிகளுக்கு முகமூடிகளை கட்டாயமாகப் பயன்படுத்துதல், பயணத்திற்குப் பிறகு கார்களை முழுமையாக சுத்தம் செய்தல் மற்றும் ஒவ்வொரு சவாரிகளிலும் இரண்டு பயணிகள் மட்டுமே அனுமதிப்பதன் மூலம் சமூக விலகலை கடைப்பித்தல் போன்றவை இதில் அடங்கும்.

Also read: Coronavirus Lockdown: Uber Starts A Package Delivery Service

0 Comments

பயணத்தின் போது ஏசியை பயன்படுத்தாமல், ஜன்னல்கள் திறந்திருக்கும் என்றும் ஓலா கூறுகிறது. இதற்கு நேர்மாறாக, உபெர் ஏசியை இயக்கிக்கொள்ளும் ஆப்ஷனை வழங்கியுள்ளது. நிறுவனங்கள் பணமில்லா பேமெண்டுகளை ஊக்குவிக்கின்றன. ஓலா மற்றும் உபெர் இரண்டும், ஓட்டுனர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சரியான சுகாதாரத்தை பின்பற்றாவிட்டால் சவாரி ரத்து செய்வதற்கான ஆப்ஷனை வழங்குகின்றன.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

Be the first one to comment
Thanks for the comments.