கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட Maruti Suzuki வெளியிட்ட பிரத்யேக பாதுகாப்பு உபகரணங்கள்!

language dropdown

மாருதி சுசூகி நிறுவனம், கோவிட்-19லிருந்து தற்காத்துக் கொள்ள பிரத்யேக பாதுகாப்பு உபகரணங்களை வெளியிட்டுள்ளது. 

வைரஸ் தொற்றிலிருந்து தங்களது வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்களும் புதுப் புது விஷயங்களை அறிமுகம் செய்து வருகிறார்கள். expand View Photos
வைரஸ் தொற்றிலிருந்து தங்களது வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்களும் புதுப் புது விஷயங்களை அறிமுகம் செய்து வருகிறார்கள்.

Highlights

  • மாருதி இணையதளத்தில் உபகரணங்களுக்கான பட்டியல் உள்ளது
  • கார் பார்டிஷன் திரை, மிக முக்கியமான உபகரணமாக உள்ளது
  • சமூக விலகலை கடைபிடிப்பதற்கு இந்த திரை உதவும்

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து வாகனத் துறை மெல்ல மீண்டு வருகிறது. பல கார் உற்பத்தியாளர்களும் மீண்டும் தங்களது செயல்பாடுகளை ஆரம்பித்துள்ளனர். நாட்டின் பல இடங்களிலும் ஷோரூம்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கார்களின் டெலிவரிகளும் பல இடங்களிம் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வைரஸ் தொற்றிலிருந்து தங்களது வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்களும் புதுப் புது விஷயங்களை அறிமுகம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மாருதி சுசூகி நிறுவனம், கோவிட்-19லிருந்து தற்காத்துக் கொள்ள பிரத்யேக பாதுகாப்பு உபகரணங்களை வெளியிட்டுள்ளது. 

03bg70eg

Maruti Suzuki தனது அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் ‘Health & Hygiene' என்கிற புதிய விஷயத்தை இணைத்துள்ளது  

மாருதி ஜென்யூன் ஆக்ஸசரிஸ் மூலம் பல பாதுகாப்பு உபகரணங்களை மாருதி நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனது அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் ‘Health & Hygiene' என்கிற புதிய விஷயத்தை இணைத்துள்ளது மாருதி. காரை பாதியாக பிரிக்கும் Partition திரை, முகவுரை, டிஸ்போசபிள் கண் கண்ணாடி, டிஸ்போசபிள் காலுரை, முக மாஸ்க் உள்ளிட்டப் பல்வேறு பொருட்கள் பாதுகாப்பு உபகரணங்கள் பட்டியலில் அடங்கும். பார்டிஷன் திரை என்பது முன் இருக்கைகளுக்கும் பின் இருக்கைகளுக்கும் இடையில் போடப்படும் திரை போன்றது. இதன் மூலம் சமூக விலகலை கடைபிடிக்க முடியும். மேலும், ஒரு இருக்கையிலிருந்த்து இருமினாலோ, தும்பினாலோ மற்ற இருக்கைகளில் இருப்பவர்களுக்கு அது பரவாத வண்ணம் பாதுகாக்கும். பாலி வினில் க்ளோரைட் கொண்டு இந்த திரை உருவாக்கப்பட்டுள்ளதால், மறு பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாக பார்க்க முடியும். 

0 Comments

எர்டிகா, எக்ஸ்எல்6, எஸ்-கிராஸ், பழைய வேகன்ஆர், டிசைர் டூர், செலிரியோ, ஆல்டோ மற்றும் இன்னும் சில கார்களுக்கு இந்த உபகரணங்கள் வருகின்றன. விட்டார பிரெட்சா, ஈகோ போன்ற கார்களுக்கும் பார்டிஷன் திரை அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது. இந்த கார் பார்டிஷன் திரை 549 முதல் 649 ரூபாய் வரையில் கிடைக்கின்றன. முக வைசர் 55 ரூபாய்க்கும், டிஸ்போசபிள் கண் கண்ணாடி 100 ரூபாய்க்கும், கை உரை 20 ரூபாய்க்கும், கால் உரை 21 ரூபாய்க்கும், முக மாஸ்க் 10 ரூபாய்க்கும் மற்றும் என்95 முக மாஸ்க் 149 ரூபாய்க்கும் வாங்கலாம். காரின் உள்ளே சுத்தமாக வைத்திருப்பதற்கு வாடிக்கையாளர்கள் சோனாக்ஸ், லிக்விமாலி போன்ற திரவங்களை 2,199 ரூபாய் முதல் 4,275 ரூபாய் வரையில் வாங்கிக் கொள்ளலாம். 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

Be the first one to comment
Thanks for the comments.