கொரோனா வைரஸ்: முகக் கவசத்தை தயாரிக்கிறது மஹிந்திரா!

language dropdown

மஹிந்திரா நிறுவனம் இன்று முதல் முகக் கவசங்களைத் தயாரிக்கவுள்ளது. நிறுவனம், தனது கண்டிவாலி ஆலையில் இந்த உற்பத்தியைத் தொடங்குகிறது. மேலும், 500 யூனிட்களைத் தொடங்கி, பின்னர் உற்பத்தியை அதிகரிக்கவுள்ளது.

expand View Photos
முகக் கவசத்தின் வடிவமைப்பு ஃபோர்டு மோட்டாரில் இருந்து பெறப்பட்டுள்ளது

Highlights

  • முகக் கவசங்கள், மருத்துவ சேவை வழங்குநர்களாக இருக்கும்
  • இது நிறுவனத்தின் கண்டிவாலி ஆலையில் தயாரிக்கப்படும்
  • இந்த வடிவமைப்பு ஃபோர்டு மோட்டார் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், முகக் கவசங்கள், கையுறைகள் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, மஹிந்திரா நிறுவனம் இன்று முதல் முகக் கவசங்களைத் தயாரிக்கவுள்ளது. நிறுவனம், தனது கண்டிவாலி ஆலையில் இந்த உற்பத்தியைத் தொடங்குகிறது. மேலும், 500 யூனிட்களைத் தொடங்கி, பின்னர் உற்பத்தியை அதிகரிக்கவுள்ளது.

தயாரிக்கவிருக்கும் முகக் கவசத்திற்கான வடிவமைப்பை, ஃபோர்ட் நிறுவானத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக மஹேந்திரா கூறியுள்ளது. இதனை, Mahindra and Mahindra-வின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பவன் கோயங்கா (Dr. Pawan Goenka) ஒரு ட்வீட் மூலம் உறுதிப்படுத்தினார். மேலும், மஹிந்திரா நிறுவனம், முகக் கவசங்களுடன், வென்டிலேட்டர்களையும் உற்பத்தி செய்யவுள்ளது. 

0 Comments

தயாரிக்கப்படும் புதிய வென்டிலேட்டர் முன்மாதிரிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவக்கூடியதாக இருக்கும். இந்த பணிகள் 2-3 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முக்கியமாக, இதை தயாரிக்க ரூ.7,500-க்கும் குறைவாகவே செலவாகும்

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News