இந்த மாதத்தில் டாட்சன் கோ அண்டு கோ லான்ச் செய்யப்படுவதை முன்னிட்டு, அதன் பேஸ்லிஃப்டட் மாடல்களை வெளியிட்டுள்ளது டாட்சன் நிறுவனம். கோ அண்டு கோவில் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான அட்வான்ஸ் புக்கிங் இன்று தொடங்கியுள்ளது. இதற்கான டோக்கனை ரூ. 11 ஆயிரம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு டோக்கன் பெறுபவர்களுக்கு வரும் 9-ம் தேதியன்று கார் லான்ச் செய்யும்போது ஹோம் டெலிவரி செய்து தரப்படும் என டாட்சன் அறிவித்துள்ளது.
புதிய மாடல் கார் குறித்து நிசான் மோட்டார் இந்தியாவின் விற்பனை பிரிவு இயக்குனர் ஹர்தீப் சீங் கூறுகையில், இளம் வாடிக்கையாளர்கள் எல்லாம் கார்கள் சிறந்த ஸ்டைலுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

அட்வான்ஸ் புக்கிங் டோக்கனை ரூ. 11 ஆயிரம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
அவர்களின் எதிர்பார்ப்பை கோ அண்டு கோ பூர்த்தி செய்யும் என்று நம்புகிறோம். ஏனென்றால் பல ஆய்வுகளை மேற்கொண்டு இந்த காரை நாங்கள் வடிவமைத்துள்ளோம்.
14 இன்ச் அலாய் வீல், மறு சீரமைக்கப்பட்ட டாஷ் போர்டு, டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெய்ன்மென்ட், ஆப்பிள் கார் ப்ளே, 1.2 லிட்டர் 3 சிலிண்டர், 67 பி.எச்.பி. பெட்ரோல் எஞ்சின் 5000 ஆர்.பி.எம். திறனை வெளிப்படுத்துகிறது.

மாருதி சுசுகி ஆல்டோ கே10, ரெனால்ட் க்விட் உள்ளிட்ட கார்களுக்கு போட்டி கொடுக்கும்
5 வகை மாடல்களை கொண்டதாகவும், 2 வண்ணங்களிலும் இந்த கார் சந்தைக்கு வருகிறது. ஆம்பர் ஆரஞ்ச் மற்றும் சன்ஸ்டோன் ப்ரவுன் ஆகியவை இதன் வண்ணங்கள். மாருதி சுசுகி ஆல்டோ கே10, ரெனால்ட் க்விட் உள்ளிட்ட சிறிய கார்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.











