டெல்லியில் பெட்ரோலைவிட விலை அதிகரித்த டீசல் - 18வது நாளாக தொடர் விலை ஏற்றம்!

தற்போதைய பெட்ரோல் விலை உயர்வினால் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும்.

View Photos
டீசல் விலை உயர்வு, போக்குவரத்து மற்றும் விவசாயத் துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. 

Highlights

  • டெல்லியில் முதன்முறையாக டீசல், பெட்ரோலைவிட விலை உயர்ந்துள்ளது
  • டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.76-க்கு விற்கப்படுகிறது
  • டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.79.88-க்கு விள்கப்படுகிறது

நாட்டில் தொடர்ந்து 17 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டு வந்த நிலையில், இன்று டீசல் விலை மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டீசல் விலையானது தொடர்ந்து 18வது நாள் உயர்வைப் பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் போடப்பட்டிருந்த முழு முடக்க நடவடிக்கையை அடுத்து, 12 வாரங்களுக்குப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்தாமல் இருந்தன பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள். ஆனால் இந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர், தொடர்ந்து எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருகின்றன. இன்று காலை 6 மணி நிலவரப்படி தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் 79.88 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 79.76 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் டெல்லியில் பெட்ரோலைவிட டீசல் விலை உயர்ந்ததாக மாறியுள்ளது. இன்று டெல்லியில் டீசல் விலை 48 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை. 

mg7e17nc

டெல்லியில் பெட்ரோலைவிட டீசல் விலை முதன்முதலாக அதிகரித்துள்ளது

அதே நேரத்தில் மற்ற முக்கிய நகரங்களான கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்டவைகளில் பெட்ரோல்தான் டீசலைவிட விலை அதிகமாக இருந்து வருகிறது. 

கடந்த 17 நாட்கள் தொடர் விலையேற்றத்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் 8.50 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் சுமார் 9.77 ரூபாய் உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க லாக்டவுன் உத்தரவு அமல் செய்யப்பட்டபோது, 82 நாட்களுக்குப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நடைமுறை 18 நாட்களுக்கு முன்னர் விலக்கப்பட்டது. அப்போதிலிருந்துதான் இரண்டு எரிபொருட்களின் விலையும் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருகின்றன. ஜூன் மாதம் 7 ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு இருந்து வருகிறது. 

3re358go

லாக்டவுன் உத்தரவு அமல் செய்யப்பட்டபோது, 82 நாட்களுக்குப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

இந்தியாவில் உள்ள பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெட மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிட்டெட் ஆகியவைதான் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை தினமும் மாற்றியமைத்து வருகின்றன. 

0 Comments

தற்போதைய பெட்ரோல் விலை உயர்வினால் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். அதே நேரத்தில் சாதாரண மக்களின் பட்ஜெட்டில் இது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல டீசல் விலை உயர்வு, போக்குவரத்து மற்றும் விவசாயத் துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.