இந்தியாவிற்கு வருகிறது பறக்கும் கார்

language dropdown

மணிக்கு 160 கி.மீ வேகத்தில் சாலையிலும், 180 கி.மீ வேகத்தில் வானில் பறக்கும் திறனில் வடிவமைக்கப்பட இருக்கின்றது.

இந்தியாவில் தயாரிக்கப்பட இருக்கும் பறக்கும் கார் expand View Photos
இந்தியாவில் தயாரிக்கப்பட இருக்கும் பறக்கும் கார்

Highlights

  • The PAL-V flying car will have two engines.
  • It can fly at speeds of up to 180 kmph.
  • The Pal-V Flying Car will be exported to other markets from India.

நெதர்லாந்தை அடிப்படையாக்க கொண்ட கார் உற்பத்தி நிறுவனமான PAL-V குஜராத்தில் தனது உற்பத்தி தொழிற்சாலையைத் தொடங்க இருக்கின்றது. இந்நிறுவனம் வருகிற 2021லிருந்து தனது உற்பத்தியை இந்தியாவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் தகவலின் படி, இந்த நிறுவனம் தொடங்கப்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குஜராத் மாநிலத்தின் முதன்மைச் செயலாளரான எம்.கே. தாஸ் மற்றும், PAL-V நிறுவனத்தின் சர்வதேச வணிக மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவரான கார்லோ மாஸ்போம்ல் ஆகியோரிடையே கையெழுத்தாகியுள்ளதாகத் தெரியவருகிறது.

pal v flying car

இந்த ஒப்பந்தத்தின்படி நிறுவனம் குஜராத்தில் அமைவதற்கான அடிப்படை இன்றியமையாத உதவிகளை மாநில அரசு வழங்கும். இந்த நிறுவனம் குஜராத்தில் அமைவதற்குக்காண காரணங்களாகச் சிறந்த மேம்பட்ட உலக அளவிலான கட்டமைப்புகளையும், எளிய வர்த்தகம் செய்யும் இடமாகவும் இருக்கின்றதாக கார்லோ மாஸ்போம்ல் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நிறுவனத்திற்கு உதவும் சிறந்த வணிக துறைமுகங்கள் மற்றும் தளவாட வசதிகளையும் அரசு வழங்குகிறதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

pal v liberty flying car

0 Comments

இந்த நிலையில் 110 கார்களுக்கான ஏற்றுமதிக்கான ஆடர்களை ஏற்கெனவே இந்நிறுவனம் பெற்றிருக்கின்றது. இரண்டு என்ஜின்களைக் கொண்ட இந்த பறக்கும் கார்கள், மணிக்கு 160 கி.மீ வேகத்தில் சாலையிலும், 180 கி.மீ வேகத்தில் வானில் பறக்கும் திறனில் வடிவமைக்கப்பட இருக்கின்றது. மேலும் இது சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது வெறும் மூன்றே நிமிடங்களில் பறப்பதற்கு ஆயத்தாமாகிவிடும். ஒரு முறை எரிபொருளை முழுமையாக நிரப்பினால் 500 கி.மீ வரை பறந்து செல்ல முடியும். 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

Be the first one to comment
Thanks for the comments.