இந்தியாவின் முதல் அட்டானமஸ் டிராக்டரை அறிமுகம் செய்தது எஸ்கார்ட்ஸ் நிறுவனம்

சென்சாரை அடிப்படையாக கொண்ட விவசாய செயலிகளை உருவாக்க உதவ இருப்பதாக எஸ்கார்ட்ஸ் தெரிவித்துள்ளது

View Photos

இந்தியாவின் முதல் அட்டானமஸ் டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது எஸ்கார்ட்ஸ் லிமிட்டெட். மைக்ரோசாஃப்ட், ரிலையன்ஸ் ஜியோ, டிரிம்பில், சம்வர்தனா மதர்சன் குரூப், வேப்கோ, போஷ், ஏ.வி.எல் என 7 டெக் நிறுவனங்காளுடன் இணைந்து இந்த அட்டானமஸ் விவசாய டிராக்டரை உருவாக்கியிருக்கிறது எஸ்கார்ட்ஸ் நிறுவனம். இந்த டிராட்க்டர் பற்றிய தகவல்களை பின்னர் வெளியிடுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த 7 நிறுவனங்கள், மின் டிரான்ஷ்மிஷன், அட்டானமஸ் செயலிகள், டேட்டா மூலம் மண் மற்றும் பயிர் மேலாண்மை, சென்சாரை அடிப்படையாக கொண்ட விவசாய செயலிகளை உருவாக்க உதவ இருப்பதாக எஸ்கார்ட்ஸ் தெரிவித்துள்ளது.

vod1ofho

எஸ்கார்ட்ஸின் கருத்து படி, இந்திய விவசாய முறையில், இயந்திர மையமாக்கலும், நுட்பமான தீர்வுகளும் தேவை என்கிறது. அதற்காகத் தான் ஏ.வி.எல் நிறுவனம் எல்க்ட்ரிக் டிரான்ஸ்மிஷனிலும், ட்ரிம்பில் நிறுவனம் சென்சார், நீர் மேலாண்மை மற்றும் தானியங்கி ஸ்டீரிங்க் தொழில் நுட்பத்தில் உதவுகின்றன என்கிறது எஸ்கார்ட்ஸ்.

0 Comments

சம்வர்தனா மதர்சன் குரூப் மூலம் ஸ்மார்ட் கேபின், ஸ்மார்ட் கேர் பிளஸ் தொழில்நுட்பங்களும், வேப்கோ மூலம் வாகன கன்ட்ரோலகள் மற்றும் அட்டோமேஷனும், மைக்ரோசாஃப்ட் மூலம் கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களும், ஜியோ மூலம் சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்களின் விற்பனை நெட்வொர்க்கை உருவாக்கவும் இருப்பதாக எஸ்கார்ட்ஸ் தெரிவித்துள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.