வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி: இலவசமாக கிடைக்க உள்ளது FASTag!

language dropdown

ஃபாஸ்ட் டேக், முழுமையாக அமலுக்கு வந்தால், ஒரு நாளைக்கு 100 கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

expand View Photos
நாட்டில் இருக்கும் 527 சுங்கச்சாவடிகளில் இந்த முறை அமலுக்கு வந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில், சுங்கக் கட்டணம் செலுத்துவதை எளிமையாக்கும் வகையில், FASTag முறையைக் கொண்டு வந்தது மத்திய அரசு. நாட்டில் இருக்கும் 527 சுங்கச்சாவடிகளில் இந்த முறை அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஃபாஸ்ட்-டேக் முறையை மேலும் பரவலாக்கும் வகையில் பிப்ரவரி 29 வரை, அதை இலவசமாக கொடுக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், “ஃபாஸ்ட்-டேக் முறையை மேலும் பரவலாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பிப்ரவரி 15 முதல் 29 ஆம் தேதி வரை, ஃபாஸ்ட்-டேகிற்கு ஆகும் 100 ரூபாய் கட்டணத்தை தள்ளுபடி செய்கிறது,” என்று அறிக்கை மூலம் கூறியுள்ளது. 

இதன் மூலம் முறையான ஆவணங்கள் மூலம் ஃபாஸ்ட்-டேக்ஐ இலவசமாக பெற முடியும். 

ஃபாஸ்ட்-டேக்ஐ அனைத்து தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகள், உள்ளூர் போக்குவரத்து அலுவலகங்கள், சேவை மையங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவைகளில் பெற முடியும். 

மேலும், “உங்களுக்கு அருகில் எங்கே ஃபாஸ்ட்-டேக்ஐப் பெற முடியும் என்பதை MyFASTag செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது www.ihmcl.com இணையதளம் முலமோ அல்லது 1033 என்கிற எண்ணை அழைத்துத் தெரிந்து கொள்ளலாம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஃபாஸ்ட்-டேக் முறை அமலுக்கு வந்ததில் இருந்து ஒரு நாளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம் 68 கோடி ரூபாயிலிருந்து 87 கோடியை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. 

ஃபாஸ்ட் டேக், முழுமையாக அமலுக்கு வந்தால், ஒரு நாளைக்கு 100 கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

0 Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.