இழப்பை ஈடுசெய்ய ஃபோர்ட் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

உலகளவில் ஃபோர்ட் நிறுவனத்தின் இழப்பை கருத்தில் கொண்டு பிரேசில் தயாரிப்பு ஆலையை மூட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

View Photos
தென் அமெரிக்காவில் ஃபோர்ட் தங்களது தயாரிப்பை குறைக்கத் துவங்கியுள்ளது

100 ஆண்டுகளுக்கு மேலாக வாகன தயாரிப்பில் ஈடுப்பட்டு வருவது ஃபோர்ட் நிறுவனம்.

ஃபோர்ட் நிறுவனம், 1967 ஆம் ஆண்டு பிரேசிலில் தங்களது தயாரிப்பு ஆலையை துவங்கியது. 2001 ஆம் ஆண்டு முதல் இந்த ஆலையில் ட்ரக்குகள் தயாரிக்கப்படுகின்றன.

கார்

இந்நிலையில், உலகளவில் ஃபோர்ட் நிறுவனத்தின் இழப்பை கருத்தில் கொண்டு பிரேசில் தயாரிப்பு ஆலையை மூட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. எப் – 4000 மற்றும் எப் – 350 ட்ரக்குகள், பியஸ்தா சிறு கார் இந்த ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலை மூடப்படுவதால், தென் அமெரிக்காவில் புது தயாரிப்பு வரையறை விரைவில் வெளியிடப்படும் என ஃபோர்ட் நிறுவனத்தின் தலைவர் ஜிம் ஹாக்கட் தெரிவித்துள்ளார். இதனால் ஃபோர்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் பதற்றம் அடைய வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.

இந்த தயாரிப்பு ஆலை மூடப்படுவதால், 2700 பேர் வேலை இழக்க நேரிடும். ஏற்கெனவே பிரேசில், 11 சதவிகிதம் வேலைவாய்ப்பின்மையால் தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ட்ரக் தயாரிப்பு ஆலை மூடப்படுவதால், கார் தயாரிப்பில் அதிக முக்கியதுவம் கொடுக்க உள்ளது ஃபோர்ட்.

2017 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, ஃபோர்ட் நிறுவனத்தின் ட்ரக் வியாபாரம் 2018 ஆம் ஆண்டில் 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

ட்ரக் விற்பனையில் ஃபோர்ட் நான்காவது இடத்தில் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் வோல்க்ஸ்வாகன் நிறுவனங்களின் விற்பனையை ஒப்பிடும் போது, ஃபோர்ட் நிறுவனத்தின் விற்பனை மிக குறைவே.

அர்ஜெண்டினாவின் பாஹியா ஆலையில் வேலை செய்யும் கிளிட்டன் டி சில்வா ‘இந்த ஆலையில் 650 பேர் வேலையை விட்டு நீக்க ஃபோர்ட் முடிவு செய்துள்ளது' என்றார். ஃபோர்ட் நிறுவனம் மொத்தம் 4,604 பேரை வேலையில் இருந்து நீக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

  

0 Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Ford EcoSport with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.