பிரக்ஸிட் சர்ச்சையால் பல கார் நிறுவனங்கள் இங்கிலாந்தை தவிர மற்ற நாடுகளில் முதலீடு செய்யும் வழிகளை பார்க்கிறார்கள்.
அதில் ஒரு பாகமாக ஃபோர்ட் நிறுவனம் சிக்காகோவில் உள்ள தங்களது தயாரிப்பு ஆலையில் முதலீடு செய்கிறது.
அதன்படி சிக்காகோவில் 1 பில்லியன் அளவிற்கு முதலீடு செய்கிறது ஃபோர்ட். இதன் மூலம் புதியதாக 500 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது.
சிக்காகோவில் உள்ள தயாரிப்பு ஆலையில் ஃபோர்ட் எக்ஸ்ப்லோரர், புது போலீஸ் இண்டர்செப்டர், புது லின்கன் ஏவியேட்டர் கார்களை தயாரிக்க இருக்கிறது ஃபோர்ட்.
1924 முதல் சிக்காகோவின் ஃபோர்ட் தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஏவியேட்டர் காரானது இந்த ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.