வட அமெரிக்காவில் 5 முக்கிய தொழிற்சாலைகளை மூடுகிறது ஜெனரல் மோட்டார்ஸ்

நிறுவனத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஜெனரல் மோட்டார்ஸ் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது

View Photos
எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது.

உலகின் மிகப்பெரும் ஆட்டோ மொபைல் நிறுவனமாக ஜெனரல் மோட்டார்ஸ் இருந்து வருகிறது. மாறிவரும் ட்ரெண்டுக்கு ஏற்ப நிறுவனத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் நிர்வாகத்தினர் இறங்கியுள்ளனர். இதன்படி, வட அமெரிக்காவில் செயல்பட்டு வரும் 5 முக்கிய தொழிற்சாலைகளை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் மூடிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டீசல் மற்றும் பெட்ரோல் கார்களுக்கு மாற்றமாக மின்சாரம் மற்றும் ஆட்டோமேட்டிக்காக இயங்கும் கார்களை தயாரிப்பதில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் கார்களை தயாரிக்கும் நிறுவனங்கள் படிப்படியாக மூடப்படவுள்ளன.

சில மாதங்களுக்கு முன்பாக தென்கொரியாவில் செயல்பட்டு வந்த தனது தொழிற்சாலைகளை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் மூடத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

0 Comments

இதனால் வாரனில் உள்ள லார்ட்ஸ்டவுன், செவ்ரோலேட் க்ரூஸ் தயாரிக்கும் ஓஹியோ, டெட்ராய்டில் உள்ள ஹாம்ட்ராம்க், மிச்சிகன், செவ்ரேலேட் வோல்ட், சேவ்ரோலேட் இம்பாலா மற்றும் கேடிலியாக் ஆகிய கார் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.