மோட்டார் வாகன ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கான காலஅவகாசம் டிச.31 வரை நீட்டிப்பு!

language dropdown

தற்போது மூன்றாவது முறையாக வாகன ஆவணங்களைப் புதுப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

expand View Photos
ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களைப் புதுப்பிக்க டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் காலஅவகாசம்

வாகன தகுதிச்சான்றிதழ், பெர்மிட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களைப் புதுப்பிக்க டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் காலஅவகாசம் நீட்டிப்பு செய்து மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த உத்தரவு  மோட்டார் வாகனச் சட்டம் 1988 மற்றும் மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 இன் படி அறிவிக்கப்பட்டு, கூடுதல் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ttldpls8

இந்தாண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மோட்டார் வாகன ஆவணங்கள் காலாவதியாகி இருக்கும் பட்சத்தில், அதனை இந்தாண்டு இறுதிவரையில் புதுப்பித்து அனுமதி வழங்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக கொரோனா வைரஸ் காரணமாக அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. இதனால், வாகன ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கு ஜூன் 30 ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்பிறகும் கொரோனா பாதிப்பு குறையாததால், செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டது. 

0 Comments

இந்நிலையில், தற்போது மூன்றாவது முறையாக வாகன ஆவணங்களைப் புதுப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News