வெளியானது Hero Xtreme 160R; விலை மற்றும் பிற விவரங்கள்!

language dropdown

மொத்த வாகனத்திலும் உள்ள விலக்குகள் எல்ஈடி தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.

expand View Photos
பியர்ல் சில்வர் வெள்ளை, வைப்ரன்ட் நீலம் மற்றும் ஸ்போர்ட்ஸ் சிவப்பு நிறங்களில் இந்த பைக் சந்தைக்கு வந்துள்ளது.

Highlights

  • ஒரு டிஸ்க் மற்றும் இரு டிஸ்க் வகைகளில் இந்த பைக் வருகிறது
  • 160 சிசி இன்ஜின் பிரிவில் இந்த பைக் வெளியாகியுள்ளது
  • 160 சிசி இன்ஜின் பிரிவில் மிகக் குறைந்த எடை கொண்ட பைக் இதுதான்

உலகின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், தனது புதிய Hero Xtreme 160R பைக்கை வெளயிட்டுள்ளது. முன்புறம் மட்டும் டிஸ்க் வசதி கொண்ட வாகனம் 99,950 ரூபாய்க்கும், இரு டிஸ்க் வசதி கொண்ட வாகனம் 1,03,500 ரூபாய்க்கும் விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், Hero Xtreme 160R பற்றி முதன்முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது. Hero Xtreme 1.R-ன் இன்ஸ்பிரேஷனிலிருந்துதான் இந்த புதிய பைக் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக இந்த பைக் பற்றி ஹீரோவின் இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் செய்ய ஆன்லைனில் புக் செய்யலாம் என்று ஹீரோ நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், அதன் டெஸ்பேட்ச் தற்போது ஆரம்பமாகியுள்ளது. 

chse25co

(கடந்த பல மாதங்களாக இந்த பைக் பற்றி ஹீரோவின் இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது)

160 சிசி இன்ஜின் வசதி கொண்ட Hero Xtreme 160Rல், BS6 அம்சம் உள்ளது. இந்த இன்ஜின் மூலம் 15 பிஎச்பி பவரும், 8,500 rpm-ம் உருவாக்க முடியும். 14 Nm உச்சபட்ச டார்க்கில் 6,500 rpm பவர் கிடைக்கும். 5 கியர்கள் கொண்ட வகையில் Xtreme 160R வடிவமைக்கப்பட்டுள்ளது. 0 - 60 kmph வேகத்தை 4.7 நொடிகளில் இந்த பைக் எட்டும் என்று ஹீரோ சொல்கிறது. இதன் மொத்த எடை 138.8 கிலோ ஆகும். 160 சிசி பிரிவில் உள்ள பைக்குகளில் இந்த வாகனம்தான் மிகக் குறைவான எடை கொண்டதாக உள்ளது. முன்புற சக்கரத்தில் 276 மிமி டிஸ்க்கும், பின்புறத்தில் 220 மிமி டிஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளன. ஏபிஎஸ் வசதியையும் இந்த பைக் பெற்றுள்ளது. 

9kf6mngg

(Hero Xtreme 160Rல் 15 பிஎச்பி பவரும், 8,500 rpm-ம் உருவாக்க முடியும்)

0 Comments

மொத்த வாகனத்திலும் உள்ள விலக்குகள் எல்ஈடி தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. முழு டிஜிட்டல் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. பியர்ல் சில்வர் வெள்ளை, வைப்ரன்ட் நீலம் மற்றும் ஸ்போர்ட்ஸ் சிவப்பு நிறங்களில் இந்த பைக் சந்தைக்கு வந்துள்ளது. டிவிஎஸ் அபாச்சே 160 4வி மற்றும் சுசூகி ஜிக்சர் 155 வண்டிகளுக்கு எதிராக களமிறங்கியுள்ளது Hero Xtreme 160R.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.