இந்தோனேசியா மோட்டர் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா கார்..!!!

இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்ட கார் 1.5 லிட்டர் பெட்ரோல் வகையாகும்.

View Photos
அப்டேட் செய்யபட்ட இந்த கார் நல்ல தோற்றத்தில் உள்ளது

ஹோண்டா நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட BR-V காரை இந்தோனேசியா சர்வதேச மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் BR-V கார் எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகவில்லை. சராசரியாக 500 BR-V கார்கள் மட்டுமே விற்பனையாகிறது. இந்த அப்டேட் செய்யப்பட்ட BR-V கார் இந்தியாவில் விற்பனைக்கு  வருமா என்பது தெரியவில்லை.

jcu0piqoஇந்த காரில் 16 இன்ச் அலாய் சக்கரங்கள் உள்ளது

புது பம்பர், முன்பக்க கிரில் ஆகியவை அப்டேட் செய்யப்பட்ட BR-V காரில் உள்ளது. L வடிவமான பகல் நேர ஹெட்லாம் உள்ளது. மேலும் 16 இன்ச் அலாய் சக்கரங்கள் உள்ளது. காரின் உள்ளேயுள்ள டாஸ்போர்ட் முழுவதும் கருப்பு நிறத்தில் உள்ளது.

icnil7gg

டாஸ்போர்ட் முழுவதும் கருப்பு நிறத்தில் உள்ளது.

0 Comments

இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்ட கார் 1.5 லிட்டர் பெட்ரோல் வகையாகும். இந்தியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் வகை உள்ளது. இந்தியாவில் புது விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளதால் அனைத்து கார் நிறுவனங்களும் அந்த விதிமுறைகளுக்கு ஏற்பவே தங்களது கார்களை தயாரிக்க எண்ணுகிறது. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.