இந்தியாவில் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று ஹோண்டா கார்ஸ் ஆகும்.
பிப்ரவரி 2019 ஹோண்டா நிறுவனத்திற்கு சிறந்த மாதமாக அமைந்துள்ளது. பிப்ரவரி 2018 யை ஒப்பிடும் போது, பிப்ரவரி 2019 –யில் 16 சதவிகிதம் அதிக கார்கள் விற்று சாதனை படைத்துள்ளது ஹோண்டா.
பிப்ரவரி 2018 –யில் 11,650 கார்களை ஹோண்டா விற்றது. அதே நேரத்தில் பிப்ரவரி 2019 –யில் 13,527 கார்களை ஹோண்டா விற்றுள்ளது. இந்த அதிக விற்பனைக்கு முக்கிய காரணமாக ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் கார் கூறப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா அமேஸ் 63,000 கார்களை இதுவரை விற்றுள்ளது.
ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் விற்பனை பிரிவு இயக்குனர் ராஜேஸ் கோயல் கூறுகையில், ‘எங்கள் நிறுவனத்தின் அதீத முயற்சியாலும் அமேஸ், சிட்டி மற்றும் டபிள்யூஆர் – வி கார்களின் அதிக வரவேற்பால் பிப்ரவரி மாதத்தில் அதிக கார்களை எங்களால் விற்க முடிந்தது. அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ள புது சிவிக் காருக்கும் மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது' என்றார்.
ஏற்றுமதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்காது ஹோண்டா கார்ஸ். அதனால் பிப்ரவரி 2019 –யில் 20 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்தது ஹோண்டா.
நடப்பு நிதியாண்டில், 1,66,585 கார்கள் விற்று கடந்த நடப்பாண்டை ஒப்பிடுகையில் 6.5 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுள்ளது ஹோண்டா கார்ஸ்
வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.
