இந்தியாவில் வாகன சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஏப்ரல் 1,2019 முன் 125 சிசி கீழ் உள்ள பைக்குகளில் CBS வசதி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
அதனால் ஹோண்டா நிறுவனத்தின் CB ஷைன் மற்றும் CB ஷைன் SP பைக்குகளில் CBS வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹோண்டா CB ஷைன் CBS பைக்கின் விலை 58,338 ரூபாயாகும். ஹோண்டா CB ஷைன் SP CBS பைக்கின் விலை 64,098 ரூபாயாகும்.
ஏப்ரல் 1,2019 முன் 125 சிசி கீழ் உள்ள பைக்குகளுக்கு CBS கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது
125 சிசி பிரிவில் அதிகம் விற்பனை ஆகும் பைக்குகளில் ஒன்று ஷைன். ஹோண்டா நிறுவனத்திற்கு லாபம் அதிகம் தரும் பைக்கும் இதுவே.
CBS என்பது, பிரேக் பிடிக்கும் போது, முன் மற்றும் பின் பிரேக்குகள் ஒன்றே செயல்படும். இதன் மூலம் பிரேக்கின் செயல்பாடு அதிகமாக வாய்ப்புள்ளது.
இந்த பிரேக் மாற்றத்தை தவிர இந்த பைக்களில் மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லை. 124,73 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்ட் இன்ஜின் உடன் வரும் இந்த ஷைன் பைக்கில் 4 ஸ்பீட் கியர் வசதியுள்ளது.
வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.