ஹோண்டா டூ வீலர்கள் உற்பத்தி குறித்து நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மினோரு காடோ கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இப்போது 4-வது தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இதன் மூலம் ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்ட டூ வீலர்களை வாடிக்கையாளர்கள் விரைவாக பெற முடியும் என்றார்.
விரிவாக்க பணிகளுக்காக 6.3 பில்லியன் டாலர்களை ஹோண்டா ஒதுக்கியுள்ளது. கடந்த 2016 பிப்ரவிரியில் குஜராத் மாநிலம் விதாலாப்பூர் ஹோண்டா தொழிற்சாலை அமைக்கப்பட்டது.
இதன்பின்னர், கடந்த 2016 ஜூன் மாதத்தின்போது 12 லட்சம் டூ வீலர்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
தற்போது அரியானா மாநிலம் மானேசர், ராஜஸ்தான் மாநிலம் தபுர்கரா, கர்நாடக மாநிலம் நர்சபுரா மற்றும் குஜராத் மாநிலம் விதலாப்பூர் ஆகிய இடங்களில் ஹோண்டா நிறுவனம் டூ வீலர் ஆலைகளை அமைத்துள்ளது.
வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.
