இந்திய கார் சந்தை மே மாத நிலவரம்: நம்பர் 1 இடத்தைப் பிடித்த Hyundai Creta!

மே மாத கார்கள் விற்பனையில் இன்னும் சில ஆச்சரியங்கள் உள்ளன.

expand View Photos
சுசூகியின் பட்ஜெட் கார்கள்தான், அந்நிறுவனம் சார்பில் அதிகம் விற்றிருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

இந்தியாவின் வாகன உற்பத்தித் துறையில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஊரடங்கு உத்தரவால் ஏப்ரல் மாதம் கார் விற்பனை நடக்கவே இல்லை. மே மாதம்தான் மீண்டும் விற்பனை ஆரம்பமானது. அப்படி ஆரம்பித்த சேல்ஸில் ஒரு ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனையான கார் என்ற பெருமையை Hyundai Creta பெற்றுள்ளது. மே மாதம் மட்டும் 3,212 கிரெட்டா கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் இப்போதுதான் முதன்முறையாக மாதாந்திர விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது கிரெட்டா. 

இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் கார்கள்தான், மாதாந்திர விற்பனையில் எப்போதும் முன்னிலையில் இருந்து வந்தது. ஆனால், அந்த இடம் தற்போது மாறியுள்ளது. மே மாதம் இந்தியாவில் விற்கபட்ட மொத்த ஹூண்டாய் நிறுவன கார்களில் கிட்டத்தட்ட பாதி கார்கள் கிரெட்டாதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

pokp6uts

மே மாதம் ஹியூண்டாய் விற்பனை செய்த 50 சதவீத கார்கள் கிரெட்டாதான்.

ஊரடங்கு உத்தரவு போடப்படும் முன்னர் கிரெட்டாவுக்கு அதிக அளவில் முன்பதிவு வந்தது. அதற்கு தற்போது டெலிவரி செய்ததுதான் இந்த அதிக அளவிலான எண்ணிக்கைக்கு காரணம். கிரெட்டாவின் லேட்டஸ்ட் வெர்ஷன், கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதுவே மே மாதம் நாட்டில் விற்பனையான 6,883 ஹூண்டாய் கார்களில் 3,212 யூனிட்டுகள் விற்றுள்ளன. 

மே மாத காலக்கட்டத்தில் மாருதி சுசூகி நிறுவனம் மொத்தமாக, 13,865 கார்களை விற்றுள்ளன. இதன் மூலம் அதிக கார்கள் விற்ற நிறுவனத்திற்கான முதல் இடத்தை மாருதி சுசூகியே மீண்டும் பிடித்துள்ளது. 
 

dhl2agl8

மே மாதம் அதிக கார்களை விற்ற நிறுவனத்திற்கான இடத்தை மாருதி சுசூகி பிடித்துள்ளது.

0 Comments

மே மாத கார்கள் விற்பனையில் இன்னும் சில ஆச்சரியங்கள் உள்ளன. மாருதி சுசூகியின் பட்ஜெட் கார்கள்தான், அந்நிறுவனம் சார்பில் அதிகம் விற்றிருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. எர்டிகா எம்பிவி தான், 2,353 யூனிட்டுகள் விற்று, அதிகம் விற்ற கார்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த மூன்று இடங்கள் முறையே மாருதி சுசூகி டிஸையர், மஹிந்திரா பொலேரோ மற்றும் மாருதி சூசுகி ஈக்கோ கார்களுக்குச் சென்றுள்ளன. ஜூன் மாதம் பல கார் நிறுவன ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளதால், தற்போதுள்ள நிலைமை கண்டிப்பாக மாற வாய்ப்புள்ளது. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.